பஞ்சமனு
என்பது முன் பின்னாக மாறி விகாரமாயிற்று. சாந்தியைச்
செய்தலால் உபநிடதத்தைச் சாந்தியெனவும், உபநிடதம் விசாரித்தலைச்
சாந்திபாடம் எனவும் வழங்குவர். (7)
நிருத்தனுறை
பதிபலபோய்ப் பணிதல்பணி நிறைவேற்றல்
திருத்தன்முடி நதியாதி தீர்த்தயாத் திரைபோய்மெய்
வருத்தமுற வாடலிவை முதற்பலவவ் வகைமூன்றிற்
பொருத்தமுறு காயிகங்கள் சிறந்தனவிப் புண்ணியத்துள். |
(இ
- ள்.) நிருத்தன் உறை பதி பல போய்ப் பணிதல் - சிவபெருமான்
உறையும் பல திருப்பதிகளிலும் சென்று வணங்கலும், பணி நிறைவேற்றல் -
திருப்பணி முடித்தலும், திருத்தன் முடி நதி ஆதி தீர்த்த யாத்திரை மெய்
வருத்தமுறப் போய் ஆடல் - இறைவன் முடி நதியாகிய கங்கை முதலிய
நதிகளில் யாத்திரையாக உடல் வருந்தச் சென்று நீராடலும், இவை முதல் பல
- ஆகிய இவை முதலாகப் பலவாம்; அவ்வகை மூன்றில் - அம்
மூவகையுள்ளும், பொருத்த முறுகாயிகங்கள் சிறந்தன - பொருந்திய
காயிகங்கள் சிறந்தன; இப் புண்ணியத்துள் - (உடம்பாற் செய்யப்படும்)
இவ்வறங்களுள்ளே எ - று.
இப்
புண்ணியத்துள் திருத்த யாத்திரை அதிகம் எனவருஞ்
செய்யுளோடு இயையும். (8)
திருத்தயாத் திரையதிக மவற்றதிகஞ் சிவனுருவாந்
திருத்தமாங் கங்கைமுதற் றிருநதிக டனித்தனிபோய்த்
திருத்தமா டுவதரிகத் திருநதிக* ளவைவந்து
திருத்தமாய் நிறைதலினா லவற்றதிகந் திரைமுந்நீர். |
(இ
- ள்.) திருத்தயாத்திரை அதிகம் - தீர்த்தங்களிற் சென்று நீராடல்
சிறந்தது; அவற்று அதிகம் - அவ்வெல்லாத் தீர்த்தங்களினும் சிறந்த, சிவன்
உருவு ஆம் திருத்தம் ஆம் கங்கை முதல் திருநதிகள் -
சிவபெருமானுருவாகிய திருத்தம் பெற்ற கங்கை முதலிய நதிகளுக்கு,
தனித்தனி போய் திருத்தம் ஆடுவது - தனித்தனியே சென்று நீராடுவது,
அரிது - மேன்மையுடையத்து; அ திருநதிகள் அவை வந்து திருத்தமாய்
நிறைதலினால் - அவ்வழகிய நதிகள் வந்து செப்பமாய் நிறைதலினால்,
அவற்று அதிகம் திரை முந்நீர் - அந்நதிகளில் ஆடுவதினும்
அலைகளையுடைய கடலில் ஆடுவது சிறந்தது எ - று.
தீர்த்தமென்பது
திருத்தமெனத் திரிந்தது. ஆடுவது அவற்றதிகம் என
முடித்து, அரிதாகிய அத்திருநதி என்னலுமாம். அவை : பகுதிப் பொருள்
விகுதி, முந்நீரில் ஆடுவது என விரிக்க. அவற்றென்னும் பன்மைக்கேற்ப
யாத்திரைகள் ஆடுதல்கள் எனக் கொள்ளல் வேண்டும். (9)
என்றுமுனி
விளம்பக்கேட் டிருந்தகாஞ் சனமாலை
துன்றுதிரைக் கடலாடத் துணிவுடைய விருப்பினளாய்த்
தன்றிருமா மகட்குரைத்தாள் சிறிதுள்ளந் தளர்வெய்திச்
சென்றிறைவற் குரைப்பலெனச் செழியர்தவக் கொழுந்தனையாள். |
(பா
- ம்.) * அதிகத் திருநதிகள்.
|