கூவிவர
- முழங்கி வர என்னலுமாம். அழைத்தும் : தனித் தன்மைப்
பன்மை வினைமுற்று. ஆல் : அசை. (12)
துண்டமதித்
திரளனைய சுரிவளைவாய் விடவுதைத்து*
வெண்டவள நுரைததும்பச் சுறாவேறு மிசைகொட்பத்
தண்டரள மணித்தொகுதி யெடுத்தெறியுந் தரங்கநிரை
அண்டநெடு முகடுரிஞ்ச வார்த்தெழுந்த கடலேழும். |
(இ
- ள்.) மதித் துண்டத் திரள் அனைய - சந்திரனது துண்டத்தின்
தொகுதி போலும், சுரிவளை வாய்விட உதைத்து - சுரிந்த முகத்தினையுடைய
சங்குகள் வாய்விட்டொலிக்குமாறு தள்ளி, வெள்தவள நுரை ததும்ப - மிக
வெள்ளிய நுரைகள் ததும்பவும், சுறா ஏறு மிசை கொட்ப - ஆண் சுறாக்கள்
மேலே சுழலவும், தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் - குளிர்ந்த
முத்துக் கூட்டங்களை எடுத்து வீசுகின்ற, தாங்க நிரை - அலை வரிசைகள்,
அண்ட நெடு முகடு உரிஞ்ச - அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவவும்,
கடல் ஏழும் ஆர்த்து எழுந்த - ஏழு கடல்களும் ஆரவாரித்து எழுந்தன
எ - று.
வெண்
தவளம் : ஒரு பொருட் பன்மொழி. சுறவு ஏறெனப் படுதலை,
"கடல் வாழ்
சுறவும் ஏறெனப் படுமே" |
என்னும் தொல்காப்பிய
மரபியற் சூத்திரத்தானறிக. உதைத்து எறியும் தரங்க
நிரையெனவும், ததும்பவும் கொட்பவும் உரிஞ்சவும் ஆர்த்தெழுந்த எனவும்
முடிக்க. எழுந்த : அன்பெறாதமுற்று. (13)
காணுமா நகர்பனிப்பக் கலிமுடிவி னயன்படைப்புக்
கோணுமா றெழுந்ததெனக் கொதித்தெழுந்த கடலரவம்
பூணுநா யகனகில புவனமெலாங் கடந்ததிரு
ஆணையா லவனடிசென் றடைந்தார்போ லடங்கியதால். |
(இ
- ள்.) காணும் மா நகர் பனிப்ப - (அவ்வரவைக்) கண்ட
(மதுரைப்) பெரும் பதியிலுள்ளார் நடுங்க, கலி முடிவின் அயன் படைப்புக்
கோணுமாறு எழுந்தது என - கலியுக முடிவின்கண் பிரமனது படைப்புப்
பொருள்கள் அழியுமாறு எழுதல் போல, கொதித்து எழுந்த கடல் - பொங்கி
எழுந்த ஏழு கடல்களும், அரவம் பூணும் நாயகன் - பாம்பினையணிந்த
சிவபெருமானது, அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் - எல்லாப்
புவனங்களையும் கீழ்ப்படுத்திய திரு ஆணையினாலே, அவன் அடி சென்று
அடைந்தார் போல் - அவ்விறைவனது திருவடியைச் சென்று அடைந்தவர்
போல, அடங்கியது - (வாலியிற் சென்று) அடங்கின எ - று.
பனிப்ப
வெழுந்தவென்க. எழுந்ததென - தாம் பொங்கி எழுதல் போல.
அகிலம், எல்லாம் என்பன ஒரு பொருளன. கடந்த - சென்ற என்னலுமாம்.
கடல் என்பதனைச் சாதி பற்றிய ஒருமையாகக் கொண்டு, அடங்கியது என
ஒருமை வினை கொடுத்தார். ஆல் : அசை.
(பா
- ம்.) * உதைந்து.
|