I


கடவுள் வாழ்த்து5



பின் வைத்து, அவை யனைத்திற்கும் அரணாக வுள்ளது அரசன்
செங்கோலாகலின் அதனை இறுதிக்கண் வைத்து வாழ்த்துக் கூறினார்.
நல்கப்படுக எனற் பாலது படு சொற்றொக்கு நல்குக என நின்றது.
‘அமரர்கண் முடியு மறுவகையானும்’ என்னும் தொல்காப்பியப்
புறத்திணையுயற் சூத்திர வுரையில் ‘முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும்
மழையும் முடியுடை வேந்தரும் உலகும்’ என்னும் ஆறனையும் அமரர்கண்
முடியும் அறுமுறை என்பர் நச்சினார்க்கினியர். இஃது ஆளுடைய
பிள்ளையார்
அருளிய,

"வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமல னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

என்னும் பரசுரத்தின் பொருளோடு பெரிதொத்துச் சிறிதொவ் வாமை காண்க.
இந்நூலாசிரியர் வேள்வி என்பதனால் அவ்வாறனுள் அந்தணர் வானவர்
ஆனினங்களைப் பெற வைத்து, வானம் என்பதனால் மழையையும், புரவலன்
என்பதனால் வேந்தனையும் கிளந்து கூறி, ஏனைப் பகுதிகளால் உலகினை
யெடுத்தோதி வாழ்த்தின ரென்க. உலகமெல்லாம் சைவ மோங்கி்ப் புல்குக
என்றதும் உயிர்களெல்லாம் பேரின்ப மெய்த வேண்டுமென்னும் கருத்துப்
பற்றியாகலின் உலகினை வாழ்த்தியதேயாயிற்று. (1)


நூ ற் ப ய ன்

[எண்சீரடியாசிரிய விருத்தம்]

திங்களணி திருவால வாயெம் மண்ணல்
     திருவிளையாட் டிவையன்பு செய்து கேட்போர்
சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்
     தகைமைதரு மகப்பெறுவர் பகையை வெல்வர்
மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்
     வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்
புங்கவரா யங்குள்ள போக மூழ்கிப்
     புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்.

     (இ - ள்.) திங்கள் அணி - சந்திரனை யணிந்த, திருவாலவாய் -
திருவாலவாயில் எழுந்தருளிய, எம் அண்ணல் - எம் இறைவன் புரிந்தருளிய,
திருவிளையாட்டு இவை - இத் திருவிளையாடல்களை, அன்பு செய்து
கேட்போர் - அன்போடு வழிபாடு செய்து கேட்பவர், சங்க நிதி
பதுமநிதி - சங்கநிதி பதுமநிதிகளைப் போலும், செல்வம் ஓங்கி -
செல்வவத்தால் உயர்ந்து, தகைமை தரும் மகப் பெறுவர் - பண்புடைய
மக்கட் பேற்றையடைவர்; பகையை வெல்வர் - பகைகளைக் கடப்பர்;
மங்கலம் நல் மணம் பெறுவர் - மங்கலமாகிய நல்ல மணங்களைப்