I


50திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



இச்செய்யுளின் கருத்தை,

"ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட்
டவர்கரும முன்கரும மாகச் செய்து
கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே"

என்னும் சிவஞானசித்தித் திருவித்தத்தா னறிக. பொச்சம் - பொய். நித்தல்
- நிச்சல் என மரீஇயது. (31)

நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெற் வெள்ளம்
நிறைபடு செம்பொன் வண்ணப் புழுக்கலா னிமிர்ந்த சோறு
குறைவற வுண்டு வேண்டும் பொருள்களுங் கொண்மி னென்ன
மறைமுத லடியார் தம்மை வழிமறித் தருத்து வார்கள்.

     (இ - ள்.) மறை முதல் அடியார் தம்மை - வேத முதல்வனாகிய
சிவபிரானுடைய அடியார்களை, நறுநெய் வெள்ளம் நிறைபடு - நறிய
மணமுள்ள நெய்ப்பெருக்கு நிறைந்த, செம்பொன் வண்ணப் புழுக்க லான் -
சிவந்த பொன்போலும் நிறத்தினையுடைய பருப்புச் சோற் றோடு, நிமிர்ந்த
சோறு - உயர்ந்த வேறுவகை அன்னத்தை, நறைபடு கனிதேன் பெய்த
பாலொடு - தேன்பொருந்திய கனியோடும் தேனளாவிள பாலோடும், குறைவு
அற - குறைவின்றி (நிறைய), உண்டு - அருந்தி, வேண்டும் பொருள்களும்
கொண்மின் என்ன - வேண்டிய பிறபொருள்களும் கொள்ளுங்கள் என்று,
வழிமறித்து அருந்துவார்கள் - வழியை மறித்து அழைத்துவந்து
உண்பிப்பார்கள் எ - று.

     செம்பொன் வண்ணப்புழுக்கல் - பருப்புச்சோறு; இதனைத் ‘தீம்
பாலடிசிலமிர்தஞ் செம்பொன் வண்ணப்புழுக்கல்’ என்னும் சிந்தாமணிச்
செய்யுளுரையாலாறிக. புழுக்கலான் - புழுக்கலோடு. நிமிர்ந்த சோறு -
பாலடிசில், அக்காரடலை, புளிச்சோறு முதலியன. வேண்டும் பொருள்கள் -
ஆடை முதலியன. வழிமறித்தல் - வற்புறுத்தல். ஒடு, எண்ணுப் பொருளில்
வந்த இடைச்சொல். ‘கற்வைகளைந்து’ என்னுஞ் செய்யுள்முதல்
இச்செய்யுள்காறும் அந்நாட்டினர் என்னும் எழுவாய் வருவித்து முடிக்க. (32)

பின்னெவ னுரைப்ப தந்தப் பெருந்தமிழ நாடாங் கன்னி
தன்னிடை யூர்க ளென்னு மவயவந் தாங்கச் செய்த
பொன்னியற் கலனே கோயில் மடமறப் புறநீர்ச் சாலை
இன்னமு தருத்து சாலை யெனவருத் திரிந்த தம்மா.

     (இ - ள்.) அந்தப் பெருந்தமிழ்நாடு ஆம் கன்னி - அச்சிறப்பு
வாய்ந்த பெரிய தமிழ் நாடாகிய கன்னியானவள், தன் இடை ஊர்கள்
என்னும் - தன்னிடத்துள்ள ஊர்களாகிய, அவயவம் தாங்கச்செய்த -
உறுப்புக்கள் தாங்குமாறு செய்த, கலனே - அணிகலன்களே, கோயில் மடம்
அறப்புறம் நீர்ச்சாலை இன்அமுது அருத்துசாலை என - திருக்கோயில்
திருமடம் அறச்சாலை தண்ணீர்ப்பந்தர் இனிய அமுதைஉண்பிக்கும்
அன்னசாலை என்றிவைகளாக, உரு திரிந்தது - வடிவம் வேறு பட்டன
வென்று கூறுவதன்றி, பின் எவன் உரைப்பது - வேறு யாது சொல்லக்
கிடப்பது எ - று.