I


500திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தன்வண்ண மெழுகடலன் றனிவண்ண மொடுகலந்து
பொன்வண்ண நறும்பொகுட்டுப் பூம்பொய்கை பொலிவெய்தி
மின்வண்ணச் சடைதாழ வெள்ளிமணி மன்றாடும்*
மன்வண்ண மெனவெட்டு வண்ணமொடும் வயங்கியதால்.

     (இ - ள்.) பொன் வண்ணம் நறும் பொகுட்டுப் பூம் பொய்கை -
பொன்னிறமுடைய நறிய பொகுட்டினை யுடைய தாமரை பொருந்திய
அவ்வாவியானது, தன் வண்ணமொடு எழு கடலின் தனி வண்ணம் கலந்து
பொலிவு எய்தி - தன் நிறத்தோடு ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும்
கலந்து பொலிவுற்று, மின் வண்ணச் சடை தாழ மணி வெள்ளி மன்று ஆடு
மன் வண்ணமென - மின்போலும் நிறமுடைய சடைகள் தாழ அழகிய
வெள்ளியம்பலத்துள் ஆடுகின்ற சிவபெருமானுடைய எண்வகை வண்ணங்கள்
போல, எட்டு வண்ணமொடு வயங்கியது - எண்வகை நிறங்களோடும்
விளங்கியது எ - று.

     மன் - இறைவன். அட்ட மூர்த்தி யாகலின் மன் வண்ணமும்
எட்டாயின. மேற் செய்யுளில் பொற்றாமரைப் பொய்கையைத் திருவடியோடு
ஒப்பித்து, இதில் இறைவன் திருவுருவோடு ஒப்பித்தமை பாராட்டற் பாலது.
ஆல் : அசை. (15)
                        
ஆகச் செய்யுள் 889



     (பா - ம்.) * வெள்ளி மன்று ணின்றாடும்.