பணியாளரும் தோழிகளாகிய
பொன்வளைய லணிந்த மகளிரும் பறித்துக்
கொடுக்க, வாங்கி மோந்து உயிர்த்து - (அம்மலர்களை) வாங்கி முகந்து
சுவாசித்து, ஆதரம் இரண்டு அற - அன்பு இரண்டில்லையாக, அமரும்
எல்லையில் - எழுந்தருளியிருக்கும் காலத்தில் எ - று.
இளைஞர்
- ஏவர் செய்வார்; "யான்கண் டனையரென் னிளையரும்"
என்பது புறம். முகந்து என்பது மோந்து என
மருவிற்று. இருவர் அன்பும்
ஒன்றாக என்பார் ஆதரம் இரண்டற என்றார். அன்பால் ஒன்றுபட்டு
என்னருமாம். (3)
தன்னமர் காதலி தன்னை நோக்கியே
மன்னவ னுன்பொருட் டேழு வாரியும்
இந்நக ரழைத்தன மீண்டுப் போந்துநின்
அன்னையை யாடுவா னழைத்தியா லென்றான். |
(இ
- ள்.) மன்னவன் - சுந்தரபாண்டியன், தன் அமர் காதலி தன்னை
நோக்கி - தன்னால் விரும்பப்பட்ட காதலியாகிய பிராட்டி யாரைப் பார்த்து,
உன் பொருட்டு - நினது பொருட்டு, ஏழுவாரியும் இந்நகர் அழைத்தனம் -
ஏழு கடலையும் இப்பதியில் வருமாறு அழைத்தேம், ஈண்டுப் போந்து
ஆடுவான் நின் அன்னையை அழைத்தி என்றான் - இங்கு வந்து
கடலாடுதற்கு உன் தாயை அழைப்பாயாக என்று கூறி யருளினான் எ - று.
தன்னால்
என விரிக்க. தன் : சாரியை. ஆல் : அசை. (4)
மடந்தையு மன்னையைக் கொணர்ந்து வாவிமா
டடைந்தன ளாகமற் றவள்வு ராணநூற்
படர்ந்தகேள் வியர்தமை நோக்கிப் பௌவநீர்
குடைந்திடும் விதியெவன் கூறுமென்னவே. |
(இ
- ள்.) மடந்தையும் - பிராட்டியாரும், அன்னையைக் கொணர்ந்து
வாவி மாடு அடைந்தனளாக - தாயை அழைத்து வந்து பொய்கையின்
பக்கத்தே அடைந்தனராக, அவள் புராண நூல் படர்ந்த கேள்வியர் தமை
நோக்கி - அவ்வன்னையானவள் புராண முதலிய நூல்களின் பரந்த
கேள்வியை யுடைய முனிவர்களை நோக்கி, பௌவ நீர் குடைந்திடும் விதி
எவன் - நீரில் ஆடுதற் குரிய விதியாது, கூறும் என்ன - கூறுவீராக என்று
வினவ எ - று.
படர்ந்த
- சென்ற என்னலுமாம். எவன் : வினாப் பெயர். கூறும் :
ஏவலில் வந்த செய்யு மென்னும் வாய்பாட்டுச் சொல். (5)
கோதறு கற்பினாய் கொழுநன் கைத்தலங்
காதலன் கைத்தல மன்றிக் கன்றின்வால்
ஆதலிம் மூன்றிலொன் றங்கை பற்றியே
ஓதநீ ராடுதன் மரபென் றோதினார். |
(இ
- ள்.) (அதற்கு அவர்), கோது அது கற்பினாய் - குற்றமற்ற
கற்பினையுடைய காஞ்சன மாலையே, கொழுநன் கைத்தலம் - நாயகன்
|