I


504திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தன்னுயிர்க் கிழவனை யடைந்து தாழ்ந்துதன்
அன்னைதன் குறையுரை யாட வாண்டகை
மன்னவன் வலாரியோ டொருங்கு வைகிய
தென்னவன் மேன்மனஞ் செலுத்தி னானரோ.

     (இ - ள்.) தன் உயிர்க் கிழவனை அடைந்து - தம் உயிருக்கு உரிமை
பூண்ட நாயகனை அடைந்து, தாழ்ந்து - வணங்கி, தன் அன்னை தன் குறை
உரையாட - தம் தாயின் குறையைக் கூறவும், ஆண் தகை மன்னவன் -
ஆண்டன்மை யுடைய வேந்தனாகிய அச் சுந்தரபாண்டியன், வலாரி யோடு
ஒருங்கு வைகிய தென்னவன் மேல் - இந்திரனோடு ஒரு சேர இருந்த
மலயத்துவச பாண்டியன்மேல், மனம் செலுத்தினான் - உள்ளத்தைச்
செலுத்தினான் எ - று.

     கிழவன் - உரியவன்; கிழமை பகுதி. உயிர் போலும் கிழவன்
என்னலுமாம். உற்றார் குறை முடிக்க வல்ல னென்பார் ‘ஆண்டகை’ என்றார்.
மனஞ் செலுத்தல் - நினைத்தல். அரோ : அசை. (9)

[- வேறு]
சிலையத் திரியார் திருவுள் ளமுணர்ந்
தலையத் திரியட் டவனா தனநீத்
துலையத் திரியொத் தவிமா னமொடு
மலயத் துவசச் செழியன் வருமால்.

     (இ - ள்.) சிலை அத்திரியார் திருவுள்ளம் உணர்ந்து - மேரு
மலையை வில்லாக உடைய இறைவர் திருவுள்ளத்தினை அறிந்து, அலை
அத்திரி அட்டவன் ஆதனம் நீத்து - பறக்கின்ற மலைகளை வென்ற
இந்திரனது ஆதனத்தை விடுத்து, உலை அத்திரி ஒத்த விமானமொடு -
சஞ்சரிக்கின்ற மலைபோன்ற விமானத்தின் கண், மலையத்துவசச் சொழியன்
வரும் - மலையத்துவச பாண்டியன் வருகின்றான் எ - று.

     அத்திரிச் சிலையார் எனப் பிரித்துக் கூட்டுக. அத்திரி மூன்றும் மலை
யென்னும் பொருளன. உலை அத்திரி என்பதற்குக் ‘கொல்லன் உலை
மூக்கிலுள்ள துருத்தி’ எனப் பொருள் கூறினாருமுளர். ஒடு : ஏழனுருபின்
பொருளில் வந்தது. ஆல் : அசை. (10)

மண்பே றடைவான் வருமேழ் கடல்வாய்
எண்பே றடையா வருளின் னமுதைப்
பெண்பே றதனாற் பெறுபே றிதெனாக்
கண்பே றடைவா னெதிர்கண் டனனே.

      (இ - ள்.) மண்பேறு அடைவான் - நிலவுலகிலுள்ளார் பயன்
அடைய, வரும் ஏழ் கடல் வாய் - வந்த எழு கடல் வாவியினிடத்து,
எண்பேறு அடையா - அளவு பெறுதலை யெய்தாத, இன் அருள் அமுதை
- இனிய அருளமுதமாகிய தன் மருகரை, பெண்பேறு அதனால் பெறு பேறு
இது எனா - பெண் பெற்றதனால் பெற்ற பயன் இது வென்று, கண் பேறு