பின்
என்பது வேறு என்னும் பொருளில் வந்தது. தமிழ்நாடென்னும்
பெயர் பாண்டிநாட்டிற்குச் சிறப்பாக வுரித்து; இதனையாமெழு திய கபிலர்
என்னும் உரை நூலுட் காண்க. கன்னியென்பதும் அதற்கோர் பெயர். கலன் :
சாரியொருமை. அம்மா : அசைநிலை. (33)
திணைமயக்கம்
[கலிநிலைத்துறை]
|
இன்ற டம்புனல் வேலிசூ ழந்நில வரைப்பிற்
குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்திணை நான்கும்
மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின்
ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை உரைப்பாம். |
(இ
- ள்.) இன் தடம் புனல் வேலிசூழ் - இனிய அகன்ற நீர்
வேலியாற் சூழப்பட்ட, இந்நிலவரைப்பில் - இந்தப் பாண்டிநாட்
டெல்லையில், குன்றம் முல்லை தண்பணை நெய்தல் - குறிஞ்சி முல்லை
குளிர்ந்த மருதம் நெய்தலாகிய, குலத்திணை நான்கம் - உயாந்த நான்கு
திணைகளும், மன்ற உள்ள - ஒரு தலையாகவுள்ளன; அவை நிற்க - அவை
அங்ஙனமாக, மயங்கிய மரபின் - (அந்நிலங்கள்) ஒன்றோ டொன்று
நெருங்கியுள்ள முறைமையால், ஒனறொடு ஒன்றுபோய் மயங்கிய -
ஒருதிணைக் கருப்பொருளுடன் மற்றொருதிணைக் கருப்பொருள் சென்று
கலந்த, திணைவகை உரைப்பாம் - திணைமயக்கக் கூறுபாட்டைச் சொல்வாம்
எ - று.
குலத்திணை
- சிறந்த நிலங்கள். பாலைத்திணைக்கு நிலமின்றாகலின்
அதனை யொழித்து நான்கென்றார்;
"அவற்றுள்,
நடுவ ணைந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே" |
என்பது இலக்கணமாகலின்,
பாலைக்கு இயற்கை நிலமின்றேனும்,
"வேனலங் கிழவனொடு வெங்கதிர்
வேந்தன்
றானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்மு
நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" |
என்று சிலப்பதிகாரம்
கூறுமாறு செயற்கை நிலமுண்டாகலின், ஒரோவிடத்து
அதுவுங் கூறப்படும். இங்கே திணைமயக்க மென்பது ஒரு திணைக்
கருப்பொருளோடு மற்றொரு திணைக் கருப்பொருள் சென்று மயங்குதல்.
இதற்கு விதி :
|