(இ
- ள்.) (அங்ஙனம் செல்வார்), முன்பு - முதலில், தம் உருவாய் -
தம் வடிவமாகி, வையம் முறை புரி கோல் கைக்கொண்டு - உலகினை
முறைசெய்கின்ற செங்கோலைக் கையிலேற்றுக்கொண்டு, பின்பு தன் உருவம்
தந்த மருகனும் - பின் தனது வடிவத்தைக் கொடுத்தருளிய மருகனாகிய
சிவபெருமானும், பெருகுகேண்மை அன்பு தந்து - மிக்க நட்போடு அன்பு
செய்து, அருகு நின்ற தடாதகை அணங்கும் - அருகில் நின்ற தடாதகைப்
பிராட்டியாரும், மீண்டு - திரும்பி, பொன் புனை குடுமிக் கோயில் புகுந்து
நன்கு இருப்ப - பொன்னாற் செய்யப் பட்ட சிகரத்தையுடைய
அரண்மனையிற் சென்று இனிது வீற்றிருக்க, கண்டார் - தரிசித்தார்கள் எ-று.
இறைவன்
பாண்டியர் கோலந் தாங்கியதனைத் தம் முருவாய் என்றார்.
பின்பு தன்னுருவ மென்றது சிவ சாரூபத்தினை. தம் முருவந் தந்த எனப்
பாடமோதிப் பிராட்டி உருவளித்தமை கூறுவாருமுளர். (25)
முன்னைவல் வினையால் யாக்கை முறைதடு மாறித் தோற்றம்
மன்னிய மனிதர் போலப் பண்டைய வடிவ மாறி
அன்னையே மகளா வீன்ற வப்பனே மருக னாக
என்னயா நோற்றே மியார்க்கு மியற்றருந் தவந்தா னென்னா. |
(இ
- ள்.) முன்னை வல் வினையால் - தொன்று தொட்டுள்ள வலய
கன்மத்தினாலே. யாக்கை முறை தடுமாறி - உடம்பாலாய முறைகள் தடுமாற்ற
மெய்தி, தோற்றம் மன்னிய மனிதர்போல - பிறப்பினைப் பொருந்திய
மனிதர்போல. பண்டைய வடிவம் மாறி - பழைய திருவுருவம்மாறி, ஈன்ற
அன்னையே மகளா - உலகங்களை ஈன்ற தாயேபுதல்வியாகவும், அப்பனே
மருகன் ஆக - தன்தையாகிய சிவபெருமானே மருகனாகவும் (வந்தருளுமாறு),
யார்க்கும் இயற்றரும் என்ன தவம் தான் - எவருக்கும் செய்தற்கரிய
தவங்களுள் என்ன தவத்தினை, யாம் நோற்றேம் என்னா - யாம்
செய்தேமோ என்று கருதி எ - று.
யாக்கைமுறை
தடுமாறலாவது தந்தை தாய் மகன் மகள் மருகன் மருகி
முதலிய முறைகளுள் ஒன்றினை யுடையார் பிறிதொரு முறையினை
யுடையாராக மாறிப் பிறத்தல். மகளாக வென்பது குறைந்து நின்றது. ஈன்ற
என்பதனை அன்னையொடுங் கூட்டுக. என்ன. எவன் என்பத னடியாகப்
பிறந்த குறிப்புவினையா லணையும் பெயர், தான்; அசை. (26)
கன்ற லான்போ லையன் கனைகழல் விடாது பற்றி
ஒன்றிய வன்பு பின்னின் றீர்த்தெழ வுள்ளத் தோடுஞ்
சென்றிரு கண்ணு முட்டி யடிக்கடி திரும்பி நோக்கக்
குன்றுறழ் விமானந் தன்னை யஞ்சலி கூப்பிச் செல்வார். |
(இ
- ள்.) கன்று அகல் ஆன்போல் - கன்றினை நீங்கிய பசு
(அடிக்கடி திரும்பிப் பார்த்தல்) போல, ஐயன் கனைகழல் விடாது பற்றி
ஒன்றிய அன்பு - இறைவனுடைய ஒலிக்கும் வீரகண்டையணிந்த திருவடிகளை
விடாது பற்றிக் கலந்த அன்பானது, பின் நின்று ஈர்த்து எழ -
|