பின்னே நின்று இழுத்தலால்,
உள்ளத்தோடும் இரு கண்ணும் சென்ற முட்டி
அடிக்கடி திரும்பி நோக்க - (தமது) உள்ளத்துடன் இரண்டு விழிகளும்
சென்று நெருங்கி அடிக்கடி திரும்பிப் பார்க்க, குன்று உறழ் விமானம்
தன்னை - மலையை யொத்த விமானத்தை, அஞ்சலி கூப்பிச்செல்வார் - கை
கூப்பி வணங்கிச் செல்லா நின்றார் எ - று.
"போதுவர் மீண்டு
செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலி னோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்" |
என்னும் பெரிய
புராணத் திருவிருத்தம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது.
ஈர்த்தெழ - ஈர்க்க சென்னும் மாத்திரையாய் நின்றது. அஞ்சலியாகக்
கைகூப்பி யென்க. அஞ்சலி கூப்பி யென்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு
முடிபாயிற்று. (27)
[- வேறு]
|
புவலோகங்
கடந்துபோய்ப் புண்ணியருக்
கெண்ணிறந்த போக மூட்டுஞ்
சுவலோகங் கடந்துபோய் மகலோகஞ்
சனலோகந் துறந்து மேலைத்
தவலோகங் கடந்துபோய்ச் சத்தியலோ
கங்கடந்து தண்து துழாயோன்
நவலோகங் கடந்துலக நாயகமாஞ்
சிவலோக நண்ணி னாரே. |
(இ
- ள்.) புவலோகம் கடந்துபோய் - (பூலோகத்தி னீங்கிப்)
புவலோகத்தைக் கடந்து சென்று, புண்ணியருக்கு எண் இறந்த போகம்
ஊட்டும் - அறஞ்செய்தவருக்கு அளவிறந்த இன்பத்தை நுகர்விக்கும்,
சுவலோகம் கடந்துபோய் - சுவலோகத்தைக் கடந்துசென்று, மகலோகம்
சனலோகம் துறந்து - மகலோகத்தையும் சனலோகத்தையும் கடந்து, மேலைத்
தவலோகம் கடந்துபோய் அவற்றின் மேலுள்ள தவலோகத்தையும் கடந்து
சென்று, சத்தியலோகம் கடந்து - சத்திய லோகத்தையும் கடந்து, தண்
துழாயோன் நவலோகம் கடந்து - தண்ணிய துழாய் மாலை அணிந்த
திருமாலின் நவலோகத்தையும் கடந்து, உலக நாயகம் ஆம் சிவலோகம்
நண்ணினார் - உலகங்களுக்கொல்லாம் தலைமையாகிய சிவலோகத்தினை
அடைந்தார் எ - று.
புவலோகம்
முதலியவற்றின் அளவையும்,அவற்றின் வசிப்போரையும்
பின் வரும் சிவதருமோத்தரச் செய்யுட்களால் அறிக.
"தரைக்கு
மேற்புவ லோக மதுதனில்
அருக்கன் சோம னெனுமிவ ராதியர்
இருப்பர் தத்தம் பலத்தினை யெய்தியே
பரித்த நீளம் பதினைந் திலக்கமே" |
|
"அதற்கு மேலம
ரேச னரும்புரி
அதற்கு நீளம் அசீதியு மைந்துமாம் |
|