அதற்கு மேன்மக
லோக மதுதனில்
வதிப்பர் மாதவ ராதி மரீசியும்" |
|
"உயரந் தானிரு
கோடி யுறுமதற்
குயரு மெல்லை சனதல முன்னதம்
உயரு நாலிரு கோடியென் றுன்னுக
உயரு மாபிதிர் தேவ ருறைவரே" |
|
"அதற்கு மேற்றவ
லோக மருந்தவர்
அதற்குள் வாழ்வர் சனகனை யாதியர்
அதற்கு நீளமு மாறிரு கோடியாம்
அதற்கு மேலயன் றேசமென் றாய்கவே" |
|
"அதற்கு நீளமு
மாறுடன் பத்துறும்
அதற்கு மேலரி தேசமென் றாய்கவே
அதற்கு நளநாற் கோடியென் றாய்கவே
அதற்கு மேற்சிவ லோகமோ ராறுறும்" |
(28)
அறக்கொடிபின்
பினறைமகனை யடிபணிந்து
தனையீன்றார்க் காதி வேத
மறைப்பொருடன் வடிவளித்த வருளின்மன
நிறைமகிழ்ச்சி வாய்கொள் ளாமற்
புறப்படு தெனவிரண்டு திருசெவிக்குஞ்
செங்குமுதம் பொதிந்த தீந்தேன்
நிறைப்பதெனப் பன்முறையாற் றுதிசெய்து
தொழுதொன்று நிகழ்த்தா நின்றாள். |
(இ
- ள்.) அறக் கொடி - தருமவல்லியாகிய பிராட்டியார், பின்
இறைமகனை அடி பணிந்து - பின்பு தம் தலைவனை அடி வணங்கி, தனை
ஈன்றார்க்கு - தம்மைப் பெற்றவர்க்கு, ஆதி வேத மறைப்பொருளை தன்
வடிவு அளித்த அருளின் - முதன்மையாகிய வேதத்தின் உட்பொருளாகிய
பெருமான் தனது சாரூபத்தைக் கொடுத்தருளிய கருணை பற்றி, மனம் நிறை
மகிழ்ச்சி வாய் கொள்ளாமல் புறப்படுவது என உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சி
வாய் கொள்ளாமல் புறப்படுவது என - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சிானது
வாயுளடங்காது வெளிப்படுகின்ற தென்னும்படி, இரண்டு திருச்செவிக்கும்
செங்குமுதம் பொதிந்த தீம் தேன் நிறைப்பது என - இரண்டு திருச்
செவிகளிலும் (தமது திருவாயாகிய) செவ்வாம்பல் மலரின் மிக்க இனிய
தேனை நிறைப்பது போல, பன் முறையால் துதி செய்து தொழுது -
பலவகையாகத் துதித்து வணங்கி, ஒன்று நிகழ்த்தா நின்றாள் - ஒன்று
கூறுகின்றார் எ - று.
அடி
பணிந்து என்பது ஒரு சொல்லாய் இறைமகனை யென்னும்
இரண்டாவதற்கு முடிபாயிற்று; இறை மகனது அடியை என விரித்தலுமாம்.
மறைப்பொருள் - மறையாகிய பொருள்; உட் பொருட்; வேதமாகிய மறை
யென்னலுமாம். உவகை மிகுதியால் நிரம்பப் பேசுதலை வாய் கொள்ளாமற்
பேசுதல் என்பர். செவிக்கும் - செவியினிடத்தும் : வேற்றுமை மயக்கம். (29)
|