எண்ணிறந்த தேவர்க்கும் யாவர்க்கும்
பயன்சுரக்கு மிமையோர் நாட்டுப்
புண்ணியவான் றன்புனிற்றுக் கன்றுக்குக்
குறைவேதென் பொருட்டென் னீன்றாள்
எண்ணியது கடலொன்றே யெழுகடலு
மீண்டழைத்தா யீன்றா ளாட
விண்ணிருந்த கணவனையும் விளித்துனருள்
வடிவளித்துன் மேனா டீந்தாய். |
(இ
- ள்.) எண் இறந்த தேவர்க்கும் - அளவில்லாத தேவர்களுக்கும்,
யாவர்க்கும் - மற்றுள்ளார் பலர்க்கும், பயன் சுரக்கும் - வேண்டிய பயனைத்
தரும், இமையோர் நாட்டுப் புண்ணிய ஆன் புனிற்றுக் கன்றுக்கு -
தேவருலகத்துப் புண்ணிய வடிவமாகிய காமதேனுவின் இளங் கன்றுக்கு,
குறைவு ஏது - குறைவு யாது (அது போல நின்னை யடுத்த எனக்கும் ஒரு
குறைவுமில்லை; ஆதலால்), என் ஈன்றாள் - எண்ணியது கடல் ஒன்றே - என்
தாய் நீராட விரும்பியது ஒரு கடலே யாகவும், என் பொருட்டு -
என்னிமித்தமாக, எழு கடலும் ஈண்டு அழைத்தாய் - ஏழு கடலையும் இங்கு
வரவழைத்தாய்; ஈன்றாள் ஆட விண் இருந்த கணவனையும் விளித்து -
அவள் நீராடுதற்கு வானலகத்திலிருந்த அவள் நாயகனையும் அழைத்து, உன்
அருள் வடிவு அளித்து - உனது கருணை யுருவத்தையும் தந்து, உன் மேல்
நாடு ஈந்தாய் - உனது மேலாகிய சிவ லோகத்தையும் கொடுத்தருளினாய்
எ - று.
யாவர்க்கும்
என்றது முனிவர் முதலாயினாரை. பயன் - பால். உண்டி.
தன் : சரியை; அசையுமாம். புனிற்றுக் கன்று - ஈன்றணிமை யுடைய கன்று;
"புனிறென் கிளவியீன்
றணிமைப் பொருட்டே" |
என்பது தொல்காப்பியம்.
ஒன்றே யாகவும் என விரித்து, என் பொருட்டு
அழைத்தாய் என இயைக்க. அருள் வடிவு - சாரூபம். ஆங்ன கன்றுக்குக்
குறைவேது என உவமை கூறிப் பொருள் தொக வைத்தது பிறிது
மொழிதல்
என்னும் அணி. (30)
தென்னர்மர பிறந்ததெனப் படுபழியி
லாழவருஞ் செவ்வி நோக்கிப்
பொன்னவிர்தார் முடிபுனைந்து கோலோச்சி
வருகின்றாய் போலு மேலும்
இந்நிலைமைக் கிடையூறு மினியின்றே
யெனத்தலைவி யியம்ப லோடுந்
தன்னிறைவி யுட்கோளை யகங்கொண்டு
மகிழந்திருந்தான் றமிழர் கோமான். |
|