11.
உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம்
|
[கலிநிலைத்துறை]
|
மன்ன
வன்குல சேகரன் றிருமகன் மனைவி
தன்னொ டுங்கட லாடிய தகுதியீ தந்தத்
தென்ன வன்றனித் திருமக டிருவுளங் களிப்ப
உன்ன ருந்திற லுக்கிர னதித்தவா றுரைப்பாம். |
(இ
- ள்.) மன்னவன் குலசேகரன் - குலசேகரனென்னும்
வேந்தனுடைய, திருமகன் - சிறந்த புதல்வனாகிய மலயத்துவச பாண்டியன்,
மனைவி தன்னொடும் - தன் மனைவியோடும், கடலாடிய தகுதி ஈது -
கடலாடிய திருவிளையாடல் இது; அந்தத் தென்னவன் தனித் திருமகள் -
அம் மலயத்துவச பாண்டியனுக்கு ஒப்பற்ற திருமகளாகிய தடாதகைப்
பிராட்டியார், திருவுளம் களிப்ப - திருவுள்ளம் மகிழ, உன் அருந்திறல்
உக்கிரன் - நினைத்தற் கரிய வெற்றியை யுடைய உக்கிர குமார பாண்டியன்,
உதித்தவாறு உரைப்பாம் - அவதரித்த திருவிளையாடலை இனிக் கூறலாம்
எ - று.
மன்னவனாகிய
திருமகன் என்பதும் பொருந்தும். தகுதி - தக்க செய்தி.
(1)
[அறுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
தண்ணிலா
மௌலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத்
தெண்ணிலா வைக றன்ன திணையடி நிழல்போல் யார்க்குந்
தெண்ணிலாக் கவிகை நீழல் செய்தருட் செங்கோ லோச்சி
உண்ணிலா வுயிர்தா னாகி முறைபுரிந் தொழுகு நாளில். |
(இ
- ள்.) தண் நிலா மௌலி வேய்ந்த சுந்தரசாமி - தண்ணிய
பிறையை முடியில் அணிந்த சுந்தரபாண்டியனாகிய இறைவன், ஞாலத்து எண்
இலா வைகல் - நிலவுலகில் அளவிறந்த காலம்இ தன்னது இணை அடி
நிழல்போல் - தன்னுடைய இரண்டு திருவடிகளின் நிழலைப் போல, யார்க்கும்
- அனைவர்க்கும், தெள் நிலாக் கவிகை நீழல் செய்து - தெளிந்த ஒளியை
யுடைய வெண் கொற்றக் குடையால் நிழல் செய்து, அருள் செங்கோல் ஓச்சி
- கருணையுடன் கூடிய செங்கோல் நடாத்தி, உள் நிலா உயிர் தானாகி -
உள்ளே விளங்கும் உயிர் தானேயாகி, முறை புரிந்து ஒழுகு நாளில் -
முறைசெய்து வருநாளில் எ - று.
சாமி
- இறைவன். சுந்தரசாமி என்னும் இருபெய ரொட்டுப் பண்புத்
தொகை வடநூன் முடிபு. தன்னது : னகரம் விரித்தல். அடி நிழலின் மிக்க
தொன்றின்மையால் அதனையே உவமை கூறினார். நிலாக் கவிகை -
திங்கள்போலும் குடையுமாம். உயிர்கட் கெல்லாம் உயிராம் இயல்பினை
யுடைய இறைவன் அரசு நடத்துங்காலும் அங்ஙனமே உயிரா யுள்ளான்
என்றார்;
|