(இ
- ள்.) அதற்கு இசைய - அதற்குப் பொருந்த, தானும் மருமகனாகி
- தானும் மருமகனாகி, வையம் முற்றும் வெண்குடைக் கீழ் வைக - உலகம்
முழுதும் வெண்கொற்றக் குடையின் நிழலிலே தங்கி யிருக்க, முறை
செய்தானாக - முறை புரிந்து வருதலால், மூன்று கொற்றவர் தம்மில் - சேர
சோழ பாண்டிய ரென்னும் மூன்று மன்னர்களில், திங்கள் கோக்குடி
விழுப்பம் எய்தப் பெற்றது - சந்திரகுலத்துத் தோன்றிய பாண்யர் குடியானது
மேன்மை யடைந்தது; இன்னும் பெறுவது ஓர் குறைவு தீர்ப்பான் -
(அவ்விறைவனே) இன்னமும் அம்மரபு பெறக் கடவதாகிய ஒரு குறையை
நீக்குவானாயினன் எ - று.
ஆக
- ஆதலால்; உமையைத் தந்து மருகளாகி முறை செய்தமையால்
என்க. திங்களின் வழிவந்த கோக்களின் குடியென விரிக்க. எய்தற்
பாலதாகிய குறைவாவது வழிபொன்றி அரசு நிலை கெடல். மற்று, போலும்
என்பன அசைச் சொற்கள். (4)
ஒன்றினைச் செய்கை செய்யா தொழிகைவே றொன்று செய்கை
என்றிவை யுடையோ னாதி யீறிலாப் பரம யோகி
நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல் விளைக்கு மாயை
வென்றவன் செய்யு மாயை விருத்தியா ரளக்க வல்லார். |
(இ
- ள்.) ஒன்றினைச் செய்கை - ஒன்றைச் செய்தலும், செய்யாது
ஒழிகை - அதனைச் செய்யாது தவிர்தலும், வேறு ஒன்று செய்கை -
மற்றொன்று செய்தலும், என்று இவை உடையோன் - என இவற்றை
உடையவனும். ஆதி ஈறு இலாப் பரமயோகி - முதலு முடிவு மில்லாத
பரமயோகியும், நன்று தீது இகழ்ச்சி வேட்கை நட்பு இகல் விளைக்கும்
மாயை வென்றவன் - நன்மையும் தீமையும் வெறுப்பும் விருப்பும் நட்பும்
பகையுமாகிய இவற்றை விளைக்கின்ற மாயையை இயல்பாகவே
வென்றவனுமாகிய சிவபெருமான், செய்யும் மாயை விருத்தி அளக்க வல்லார்
யார் - செய்கின்ற மாயையின் விருத்தியை அளந்து காண வல்லவர் யாவர்?
(ஒருவருமில்லை என்றபடி) எ - று.
ஒன்றினைச்
செய்கை முதலிய மூன்றும் வடமொழியில் கர்த்திருத்துவம்,
அகர்த்திருத்துவம், அந்நியதா கர்த்திருத்துவம் என்று கூறப்படும்; இவற்றால்
தன்வயத்தனாதலாகிய இறைமைக் குணம் கூறியவாயிற்று;
"ஒன்றை
நினைக்கி னதுவொழந்திட் டொன்றாகும்
அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
ஏனையாளு மீசன் செயல்" |
என்னும் நல்வழி
வெண்பாவில் இறைவனது தன்வய முடைமையும், உயிரினது
தன்வய மின்மையும் ஒருங்கே கூறப்படுதல் காண்க. மாயை விருத்தி -
விசித்திரச் செயல்கள். "மாயை வென்றவன் செய்யு மாயை விருத்தி" என
முரணயந் தோன்றக் கூறினார். (5)
இந்திர சால
விச்சை காட்டுவா னென்னத் தன்பாற்
செந்தழ னாட்ட மீன்ற செல்வனைக் கருப்ப மெய்தா
தந்தயி லுயிரு ஞால மனைத்தையு மீன்ற தாயாஞ்
சுந்தர வல்லி தன்பாற் றோன்றுமா றுள்ளஞ் செய்தான். |
|