(இ
- ள்.) இந்திர சால விச்சை காட்டுவான் என்ன - இந்திர சால
வித்தை காட்டுபவனைப்போல, தன்பால் செந்தழல் நாட்டம் ஈன்ற செல்வனை
- தன்னிடத்துள்ள சிவந்த அனற்கண் தந்தருளிய செல்வனை, கருப்பம்
எய்தாது - கருப்ப முறாமல், அந்தம் இல் உயிரும் - அளவிறந்த
உயிர்களையும், ஞாலம் அனைத்தையும் - உலக முழுதையும், ஈன்ற தாயாம்
சுந்தர வல்லி தன்பால் - பெற்றருளிய அம்மையாகிய தடாதகைப்
பிராட்டியாரிடத்தே, தோன்றுமாறு உள்ளம் செய்தான் - உதிக்கும்படி
திருவுள்ளங் கொண்டான் எ - று.
சாலம்
- வலை; வலைபோல் அகப்படுத்தலின் விச்சைக்குச் சால
மென்பது பெயராயிற்று. இந்திரசாலம் - சாலங்களிற் றலையாயது;
"இந்திர சாலங்
காட்டிய வியல்பும்" |
என்பது திருவாசகம்.
தன்பால் நின்றும் நாட்டத்தால் ஈன்ற என
விரித்தலுமாம். செல்வனைத் தோற்றுமாறு உள்ளஞ் செய்தான் என இயையும்.
செல்வன் - முருகன். வல்லி தன்பால் என்பதில் தன் சாரியை. (6)
அங்கவன் வரவுக் கேற்ப வாயமும் பிறருந் தாழ்ந்து
மங்கைநின் வடிவுக் கேற்பக் கருவுரு வனப்புஞ் சீருந்
திங்கடோ றாற்று மன்றற் செவ்வியுங் காண வாசை
பொங்கிய தெங்கட் கென்றார் புனிதையப் படிபோ லானாள். |
(இ
- ள்.) அங்கு அவன் வரவுக்கு ஏற்ப - அங்கு அச்செல்வன்
வருகைக்கு இசைய, ஆயமும் பிறரும் தாழ்ந்து - தோழிகளும் மற்றவர்களும்
வணங்கி, மங்கை - பிராட்டியாரே, நின் வடிவுக்கு ஏற்பக் கரு உரு வனப்பும்
சீரும் - நினது திருவுருவத்திற்குப் பொருந்த (உண்டாகிய) கருப்பத்
தோற்றத்தின் அழகையும் சிறப்பையும், திங்கள்தோறு ஆற்றும் மன்றல்
செவ்வியும் - மாதந்தோறும் செய்யும் திருவிழாப் பொலிவையும், காண
எங்கட்கு ஆசை பொங்கியது என்றார் - கண்டு களிக்க எங்களுக்கு
விருப்பம் மேலோங்கியது எனக் கூறினார்கள்; புனிதை அப்படி ஆனாள் -
பிராட்டியாரும் அங்ஙனம் ஆயினார் எ - று.
மன்றல்
- சடங்கு. போல் : அசை. (7)
கருமணிச் சிகரச் செம்பொற் கனவரை யனைய காட்சித்
திருமுலை யமுதம் பெய்த செப்பிரண் டனைய வாக
வருமுலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற
அருள்கனிந் தனையா ணாவிற் கின்சுவை யாம்வம் பொங்க. |
(இ
- ள்.) கருமணி சிகரச் செம்பொன் கனவரை அனைய காட்சி -
கருமணியாகிய சிகரத்தையுடைய சிவந்த பொன் மலை போலும்
தோற்றத்தையுடைய, திருமுலை - அழகிய கொங்கைகள், அமுதம் பெய்த
செப்பு இரண்டு அனையவாக - அமுதம் நிரப்பிய இரண்டு செப்புகள்
போலாகவும், வருமுலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற -
வளர்கின்ற கொங்கைகளைச் சுமத்தலால் மறைந்த இடையும் வெளிப்பட்டுத்
|