தோன்றவும், அருள்
கனிந்தனையாள் - அருள் பழுத்தாலொத்த பிராட்டியார்,
நாவிற்கு இன் சுவை ஆர்வம் பொங்க - நாவினுக்கு இனிய சுவையின்
கண்விருப்பம் ஓங்கவும் எ - று.
கருமணிபோலும்
முலைக்கண்ணைக் கருமணியென்றார். நீலமணிச்
சிகரத்தையுடைய பொன் மலைபோலும் என இல்பொருளுவமை யாக்கிச்
சூசுகத்தையுடைய என வருவித்துரைத்தலுமாம். பொன், கனம் என்பன ஒரு
பொருளன; கனவரை - பெரிய மலை யென்னலுமாம். மாய்ந்த - மறைந்த
மருங்குலும் சுமந்து தோன்ற வென இயைத்தலுமாம். கனிந்தாலனையாள்
என்பது கனிந்தனையாள் என்றாயிற்று.
"விரும்பார்
முலைக்கண் கரிந்து திங்கள்
வெண்கதிர்கள் பெய்திருந்த பொற்செப்பே
போல்
அரும்பால் பரந்து நுசுப்புங் கண்ணின் புலனாயிற்று" |
என்னும் சிந்தாமணியின்
கருத்து இதனுடன் ஒத்து நோக்கற் பாலது. (8)
என்னவு மெளிய வேனு மரியன வென்ன வேட்டாள்*
அன்னவும் போக பூமி யரும்பெற லுணவு நல்கிப்
பன்னக ரமுதுந் திங்கட் படுசுவை யமுதுந் தெய்வப்
பொன்னக ரமுது மாசை புதைபடக் கணஙக ணல்க. |
(இ
- ள்.) என்னவும் - எத்துணையும், எளியவேனும் - எளிமை
யுடைய பொருள்களாயினும், அரியன என்ன வேட்டாள் - அவற்றை
அரியனவாகக் கருதி விரும்பினார்; அன்னவும் - அங்ஙனம் விரும்பும்
பொருளையும், போகபூமி அரும் பெறல் உணவும் நல்கி - போக பூமியிலுள்ள
பெறுதற்கரிய உணவுகளையும் கொடுத்தும், பன்னகர் அமுதும் -
நாகருலகத்திலுள்ள அமிழ்தினையும், திங்கள் படு சுவை அமுதும் - சந்திர
மண்டலத்துண்டாகும் சுவை மிக்க அமிழ்தினையும், ஆசை புதைபட -
விருப்பம் நீங்க, கணங்கள் நல்க - சிவகணங்கள் கொடுக்கவும் எ - று.
எனையவும்
என்பது என்னவும் என்று திரிந்தது. வயாவுற்ற மகளிர்
எளிய பொருள்களையும் அரியனபோல் விரும்புதல் இயல்பு. போகபூமி -
உத்தர குரு முதலியன. பன்னக ருலகத்தைப் பன்னகர் என்றார். நாகருலகம்
போகத்திற் சிறந்த தென்பதனை,
"நாக நீணகரொடு
நாகநா டதனொடு
போகநீள் புகழ் மன்னும் புகார்நக ரதுதன்னில்" |
என்னும்
சிலப்பதிகார அடிகளின் உரைநோக்கியுணர்க. பாரதத்திலும்
நாகருலகத் தமிழ்து கூறப்பட்டுளது. பெறலரும் என்பது முன் பின்னாகத்
தொக்கது. மேற் செய்யுளிலுள்ள ஆக, தோன்ற, பொங்க என்னுஞ்
செயவெனெச்சங்கள் வேட்டாள் என்பதனைக் கொண்டு முடியும். (9)
(பா
- ம்.) * வேட்டால்.
|