I


52திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்"

என்னும் தொல்காப்பியச சூத்திரமாகும். இதனுரையிலே ‘ஒன்றென
முடித்தலாற் பிற கருப்பொருள் மயங்குவ உளவேனுங் கொள்க’ என்றார்
நச்சினார்க்கினியர். ‘இவ்வாறு வருவன திணைமயக்கமாம்’ என்றார்
இளம்பூரணர். எனினும் ‘வந்த நிலத்தின் பயத்த வாகும்’ என்பதன்
கருத்தைத் தழுவியதன்று இங்கே கூறப்பட்டுள்ள திணை மயக்கம். நான்கு
நிலங்களும் நெருங்கியிருத்தலாகிய வளமுடைமையே இதனாற் பெறப்படுவது.
இங்ஙனம் பாடுவது பழைய வழக்கேயென்பது பொருநராற்றுப்படையில்
(அடி - 218 - 226) அறியலாகும். "குறிஞ்சி பரதவர் பாட நெய்தல், நறும்பூங்
கண்ணி குறவர்சூடக், கானவர் மருதம் பாட வகவர், நீனிற முல்லைப்
பஃறிணை நுவலக், கானக்கோழி கதிர்குத்த, மனைக்கோழி தினைக்கவர,
வரைமந்தி கழிமூழ்கக், கழிநாரை கதிர்குத்த, மனைக்கோழி தினைக்கவர,
வரைமந்தி கழிமூழ்கக், கழநாரை வரையிறுப்பத், தண்வைப்பினா னாடுகுழீஇ"
என்பது காண்க. மன்ற, தேற்றப் பொருள்தரும் இடைச்சொல். (34)

கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர்க் குருந்தின்
ஒல்லை தாயதிற் படர்*கறிக் கருந்துண ருகுப்ப
முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில்
எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர்.

     (இ - ள்.) கொல்லை ஆன் நிரை மேய்ப்பவர் - முல்லை நிலத்திற்
பசுக்கூட்டத்தை மேய்க்கும் இடையர்கள், கோழ் இணர் குருந்தின் -
கொழுவிய பூங்கொத்துக்களையுடைய குருந்த மரத்தின்மேல், ஒல்லை தாய்
- விலைவாகத் தாவி ஏறி, அதில் படர் - அதிலே படர்ந்துள்ள, கறிக்
கருந்துணர் உகுப்ப - மிளகு கொடியிலுள்ள கரிய காய்க்கொத்துக்களை
உதிர்ப்பார், எயின் சிறுமகளிர் - வேட்டுவச் சிறுமியர், முத்து இழை சிற்றில்
எல்லை - முத்துக்களாலியற்றிய சிற்றிலினிடத்து, முல்லை சோறு என -
முல்லை அரும்புகளே சோறாக, தேன்விராய் - (அவற்றோடு) தேனைக்
கலந்து, ஆயமோடு ஆடுப - மகளிர் கூட்டத்துடன் விளையாடுவர் எ - று.

     குருந்து முல்லைக்கும், - கறி குறிஞ்சிக்கும் உரியன. முத்து - குறிஞ்சி
நில முத்துக்கள். எயின் என்னுஞ் சாதிப்பெயர் குறிஞ்சித் திணை மக்கட்கும்,
பாலைத்திணை மக்கட்கும் உரியது; ஈண்டு, குறிஞ்சிக்குரிய வேட்டுவச்
சாதியைக் குறிக்கின்றது. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் மயக்கங் கூறியவாறு.
பின்னிரண்டடிக்கு முல்லை நெய்தல் பாலைகளின் மயக்கமாகச் சிலர்
பொருள் கூறியிருப்பது பொருந்தாதாகும். விராவி யென்பது விராய் என
விகாரப்பட்டது. உகுப்ப, ஆடுப என்பன பலர்பால் முற்றுக்கள். (35)

கன்றொ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு
மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி
குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழல் மருதஞ்
சென்று றங்குவ சேவக மெனமுறச் செவிமா.


     (பா - ம்.) * அகிற்படர்.