புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க்
கண்ணிய சடங்குமூதூ ரருங்கடி வெள்ளத் தாழ
எண்ணிய திங்க டோறு மியற்றவிக் கன்னித் தேயம்
பண்ணிய தருமச் சார்பாற் படுபயன் றலைப்பா டெய்த. |
(இ
- ள்.) புண்ணிய முனிவர் - புண்ணியமே வடிவாகிய
முனிவர்களும், வேத பண்டிதர் - வேதங்களில் வல்ல மறையோர்களும்,
போந்து - வந்து, வேந்தர்க்கு அண்ணிய சடங்கு - அரச மரபினர்க்குப்
பொருந்திய சடங்குகளை, முது ஊர் திருவிழா வெள்ளத்து ஆழ -
பழமையாகிய மதுரைப் பதியானது அரிய திருவிழா வென்னும் பெருக்கில்
அழுந்த, எண்ணிய திங்கள்தோறும் இயற்ற - வரையறுத்த மாதங்கடோறும்
செய்து முடிக்கவும், இ கன்னித் தேயம் பண்ணிய தருமச் சார்பால் படு பயன்
தலைப்பாடு எய்த - இந்தக் கன்னி நாடானது இயற்றிய அற நெறியால் வரும்
பயனை அடையவும் எ - று.
முனிவரும்
பண்டிதரும் போந்து சடங்கினை இயற்றவு மென்க. நகர்
முழுதும் விழாவாற் பொலிந்த தென்பார் மூதூர் அருங்கடி வெள்ளத்தாழ
என்றார்; ஊரிலுள்ளார்க்கு ஆகுபெயருமாம். எண்ணிய - இன்ன சடங்கு
இன்ன திங்களிற் செயற்பாலதென எண்ணப்பட்ட; செய்யிய வென்னும்
எச்சமாக்கி, மதிக்கும்படி யென்றலுமாம். தலைப்பாடு - தலைப்படுதல் : ஒரு
சொல். (10)
மாசறத் துறந்தோ ருள்ள மானவான் களங்க நீங்க
ஈசர்தங் கிழமை யென்னு மிந்துவா திரைநாள் செய்த
பூசையின் பயன்றா னெய்த வெரிபசும் பொற்கோள் வந்து
தேசொடு கேந்தி ரத்திற் சிறந்தநல் லோரை வாய்ப்ப. |
(இ
- ள்.) மாசு அறத் துறந்தோர் உள்ளம் மான குற்றமறத் துறந்த
பெரியாரின் மனத்தையொப்ப, வான் களங்கம் நீங்க - ஆகாயம்
களங்கமின்றி விளங்கவும், ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள்
- சிவபெருமானுக்கு உரியதெனப்படும் திங்கட் கிழமையும் திரு
ஆதிரைநாளும், செய்த பூசையின் பயன் எய்த - செய்த வழி பாட்டின் பயனைப் பொருந்தவும்,
எரி பசும் பொன் தோள் வந்து - விளங்கா நின்ற
பசிய பொன்னாகிய கோள்வந்து, கேந்திரத்தில் தேசொடு சிறந்த -
கேத்திரத்தில் ஒளியுடன் விளங்கப்பெற்ற, நல் ஒரை வாய்ப்ப - நல்ல
முழுத்தம் வாய்க்கவும் எ - று.
இந்து
- திங்கள். சிவபிரானுக் குரிய கிழமை யெனப்படும் திங்கட்
கிழமை யென விரிக்க; சோமன் என்பதற்குச் சிவனென்னும்
பொருளுண்மையும் காண்க. ஈசர்க்குரிய தாதல் ஆதிரைக்கும் கொள்க;
"மன்னிய
நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்
ஆதிரையா னாதிரையா னென்றென் றயர்வுறுமீ
ஊர்திரைநீர் வேலி யுலகு" |
என்பது முத்
தொள்ளாயிரம். பொன் - வியாழன்; பொன் என்பதற்கேற்க
அடைகள் கொடுத்தார். பண்டைத் தமிழ் நூலோர் கோட்களினியல்பை
|