நன்கறிந்து செந்நிற
முடையதனைச் சேய் என்றும் செவ்வாய் என்றும்,
பொன்னிற முடையதனைப் பொன் என்றும், வெண்ணிற முடையதனை
வெள்ளி என்றும், கருநிற முடைய சனிகை் கரியன் என்றும் பெயரிட்டு
வழங்குவா ராயினரென்க. வியாழனாகிய நற்கோள் கேந்திர மேறியிருப்பது
நன்மை பயப்பதாமெனல் குறி நூற் கொள்கை; கேந்திரம் - இலக்கினத்திற்கு
ஒன்று நான்கு ஏழு பத்து ஆம் இராசிகள். சனி முதலிய தீக்கோளின்
இயைபின்றியென்பார் தேசொடு சிறந்த என்றார். ஓரை யென்றது ஈண்டு
இலக்கினத்தை. தம் : சாரியை. தான் : அசை. (11)
முந்தைநான்
மறைக டாமே முழங்கமந் தார மாரி
சிந்தநாண் மலர்பூத் தாடு மின்னெனத் திசைக டோறும்
அந்தர மகளி ராடத் துந்துபி யைந்து மார்ப்ப
விந்தையுந் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப. |
(இ
- ள்.) முந்தைநால் மறைகள் தாமே முழங்க - முதன்மை பெற்ற
நான்கு வேதங்களும் தாமே ஒலிக்கவும், மாந்தாரம் மாரிசிந்த - (தேவர்கள்)
மந்தார மலர்மழையைப் பொழியவும், நாள்மலர் பூத்து ஆடும் மின் என -
புதிய மலர்களைப் பூத்து ஆடுகின்ற மின்னலைப் போல, திசைகள் தோறும்
- திக்குகள் தோறும், அந்தர மகளிர் ஆட - தேவமகளிர் ஆடவும், துந்துபி
ஐந்தும் ஆர்ப்ப - ஐவகை இயங்களும் ஒலிக்கவும், விந்தையும் திருவும்
வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப வீர மகளும் திருமகளும் கலைமகளும்
இறுமாக்கவும் எ - று.
மறைகள்
முழங்கலும், விந்தை முதலாயினார் வீறெய்துதலும் தத்தமக்கு
உளவாகும் ஆக்கங் கருதி யென்க மலர் பூத்தாடும் மின்னென என்றது
இல்பொருளுவமை. வீறு - பிறி தொன்றற்கில்லாத சிறப்பு என்பர்
நச்சினார்க்கினியர். (12)
அந்தணர்
மகிழ்ச்சி தூங்க வடுத்தவர் வளர்க்கு முன்னே
மந்திர வேள்விச் செந்தீ வலஞ்சுழித் தெழுந்தார்த் தாட
சிந்துர நுதன்மா வெட்டுஞ் சேடனும் பொறை யெய்ப்பாற
இந்திரன் மேருப் புத்தேள் புனலிறைக் கிடத்தோ ளாட. |
(இ
- ள்.) அந்தணர் மகிழ்ச்சி தூங்க - மறையவர்கள் களிகூரவும்,
அவர் அடுத்து வளர்க்கு முன்னே - அவர்கள் வந்து ஆகுதி செய்து
வளர்ப்பதற்கு முன்னதே, மந்திர வேள்விச் செந்தீ வலம் சுழித்து எழுந்து
ஆர்த்து ஆட - மந்திரப்படி செய்யும் வேள்விக்குண்டத்தின்கண் சிவந்த
தீயானது வலமாகச் சுழித்து ஓங்கி ஒலித்தாடவும், சிந்துரம் நுதல் மா மட்டும்
சேடனும் பொறை எய்ப்பு ஆற - சிந்துரம் அணிந்த நெற்றியையுடைய திசை
யானைகள் எட்டும் அனந்தனும் சுமத்தலினின்று இளைப்பாறவும், இந்திரன்
மேருப் புத்தேள் புனல் இறைக்கு இடத்தோள் ஆட - இந்திரனுக்கும்
மேருமலைக்கும் வருணனுக்கும் இடத்தோள் துடிக்கவும் எ - று.
மகிழ்ச்சி
இயல்பாலுண்டாயது. மாவெட்டும் சேடனும் பொறுக்கும்
பாரத்தை இக் குமாரன் பொறுத்தலின் அவன் இளைப்பாற வென்றார்.
|