I


522திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



பொறுத்தலினீங்கி இளைப்பாற பென்க; புரத்தலினருமை நோக்கி அதனைப்
பொறுத்தல் என்ப. ஆடவர்க்கு இடத்தோள் ஆடுதல் தீங்கின் குறி; இந்திரன்
முடிமேல் வளை யெறிந்தும், மேருவைச் செண்டாலடித்தும் கடல் சுவறவேல்
விடுத்தும் அன்னார் செருக்கை யொழித்தலின், அவர்க்கு இடத்தோள் ஆட
என்றார். மேரு முதலியவற்றைத் தெய்வமாக்கியுரைத்தலும் மரபு;

"அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே"

என்பதும் இதனை வலியுறுத்தும். (13)

ஆலயத்தை யமுத மாக்கு மண்ணலு மணக்குங் கொண்ட
கோலத்துக் கேற்பக் காலைக் குழந்தை வெங்கதிர்போ லற்றைக்
காலத்தி லுதித்த சேய்போற் கண்மழை பிலிற்று நிம்ப
மாலைத்தோட் செழியன் செல்வ மகள்வயிற் றோன்றி னானே.

     (இ - ள்.) ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும் -
நஞ்சினை அமுதாக்கிய இறைவனும் பிராட்டியும், கொண்ட கோலத்துக்கு
ஏற்ப - எடுத்த திருக்கோலத்திற்கு இசைய, காலைக் குழந்தை வெங்கதிர்
போல் - காலையிலுதித்த விருப்பஞ் செய்யும் இள ஞாயிற்றைப் போரவும்,
அற்றைக் காலத்தில் உதித்த சேய்போல் - அந்நாளில் அவதரித்த கந்தவேள்
போலவும், கள்மழை பிலிற்றும் நிம்ப மாலை - தேனாகிய மழையைப்
பொழியும் வேப்ப மலர் மாலையை அணிந்த, தோள் - தோளையுடைய,
செழியன் - மலயத்துவச பாண்டியனது, செல்வமகள் வயின் - செல்வப்
புதல்வியாகிய தடாதகைப் பிராட்டியாரிடத்தே, தோன்றினான் - (உக்கிர
குமாரன்) அவதரித் தருளினான் எ - று.

     நஞ்சின் றன்மை யொழிந்து அமிழ்தஞ் செய்யும் காரியத்தைச்
செய்தலின் ‘அமுத மாக்கும்’ என்றார்; உணவாக்கிய என்னலுமாம். "ஆலத்தி
னாலமிர் தாக்கிய கோன்றில்லை யம்பலம்போல்" என்னும் திருச்சிற்றம்பலக்
கோவை
யாரின் அடியும், அதற்குப் பேராசிரியர் எழுதிய உரைக் குறிப்பும்
இங்கு நோக்கற் பாலன. வெம்மை - விருப்பம். கதிர், ஞாயிற்றுக்கு
ஆகுபெயர். அற்றை யென்பது காலத்தின் முன்மை சுட்டுவது. சேயின் அமிச
மென்பார் ‘சேய்போல்’ என்றார். எழுவாய் வருவிக்க. வேல் எட்டாஞ்
செய்யுள் முதலாகவந்த நல்க, இயற்ற, எய்த, நீங்க, எய்த, வாய்ப்ப, முழங்க,
சிந்த. ஆட, ஆர்ப்ப, வாய்ப்ப, தூங்க, ஆற, ஆட என்னும்
செயவெனெச்சங்கள் இப்பாட்டில் தோன்றினான் என்பது கொண்டு முடிந்தன;
இவ்வெச்சங்களின் காலங்களை ஓர்ந்துணர்க. ஏ : அசை. (14)

எடுத்தனண் மோந்து புல்லி
     யேந்தினள் காந்தன் கையிற்
கொடுத்தனள் வாங்கி வீங்கு
     கொங்கையின் றிழிபால் வெள்ளம்