(இ
- ள்.) குட புலத்து அரசும் - மேற்புலத்
தரசனாகிய சேரனும்,
பொன்னிக் குளிர் புனல் கோழி வேந்தும் - காவிரியின்தண்ணிய நீர் சூழ்ந்த
உறையூரிலுள்ள சோழ மன்னனும், வடபுலத்து அரசர் யாரும் - வடக்கின்கண்
உள்ள அரசரனைவரும், குறுநில வாழ்க்கைச் செல்வத்து - குறுநில வேந்தரின்
வாழ்க்கைச் செல்வத்தினையுடைய, அடல்கெழு - வலிமை பொருந்திய,
தண்தார் - தண்ணிய மாலையை யணிந்த, தொண்டை அரசொடும் -
தொண்டை மன்னனோடும், அனிகம் சூழ - சேனைகள் சூழ - கடல்கள் நால்
திசையும் பொங்கி வருவபோல் - கடல்கள் நான்கு திக்குகளிலும் புடை
பெயர்ந்து வருவன போல, கலிப்ப வந்தார் - ஆரவார முண்டாக வந்தார்கள்
எ - று.
குளிர்
புனலையுடைய பொன்னியென மாற்றலுமாம். ஒரு கோழி
யானையைப் போர்தொலைத்த விடத்துக் கண்ட நகர மாதலின் உறை
யூர்க்குக் கோழி யென்பது ஒரு பெயர்;
"மறஞ்செவி வாரண
முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர்" |
என்று சிலப்பதிகாரம்
கூறுவதுங் காண்க. வடபுலத் தரசர் - வடுக வரசர்
முதலாயினார். தொண்டை அரசு - தொண்டை நாடாளும் அரசன்;
தொண்டைமான். தமிழகத்தில் முடியுடை வேந்தர் மூவரு மொழிந்த ஏனை
யரசரெல்லாம் குறுநில மன்னரெனப் படுவர். படைப்பெருமையாலும்
ஆரவாரத்தாலும் கடல்கள் பொங்கி வருவ போல் என்றார். வருவ என்பது
தொழிற் பெயராய் நின்றது. (17)
மன்னனைத் தேவி தன்னை முறையினால் வழுத்தி வாழ்த்தி
நன்னர்கோ ளாகி யோகை நவின்றுவெண் மழுவா னீத்த
தென்னவர் பெருமான் றேவி திருமுகக் கருணை பெற்றுப்
பொன்னடி பணிந்து தம்மூர்ப் போகுவா ரினைய சொல்வார். |
(இ
- ள்.) மன்னனைத் தேவி தன்னை - சுந்தர பாண்டியரையும்
தடாதகைப் பிராட்டியாரையும், முறையினால் வழுத்தி வாழ்த்தி - முறைப்படி
துதித்து வாழ்த்தி, நன்னர்கோள் ஆகி - (அவர்களால்) நன்கு ஏற்றுக்
கொள்ளப்பட்டவர்களாய், ஓகை நவின்று - மகிழ்ச்சி மொழிகளைப் பேசி,
வெண் மழுமான் நீத்த தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணை
பெற்று - வெள்ளிய மழுவையும் மானையும் நீத்துவந்த அப் பாண்டியர்
தலைவனும் பிராட்டியாருமாகிய இவர்களின் திருமுகக் கருணையைப்பெற்று,
பொன் அடி பணிந்து தம்ஊர் போகுவார் - (அவர்களுடைய) பொன்போலுந்
திருவடிகளை வணங்கித் தத்தம் இடங்களுக்குச் செல்கின்றவர்கள், இனைய
சொல்வார் - இத்தன்மையவற்றைக் கூறலுற்றார்கள் எ - று.
நன்னர்
- நன்கு : பண்புப் பெயர். கோள் என்பது ஆகு பெயராய்க்
கொள்ளப்பட்டவர் என்னும் பொருளில் வந்தது. ஓகை - உவகை;
மொழகளுக்காயிற்று. நவிலுதல் - வினாவியும் விடுத்தும் அளவளாவுதல்,
பெருமான் கருணையும் தேவி கருணையும் எனக் கூட்டுக. ஊர் புகுவார் :
ஏழாம் வேற்றுமையில் இயல்பாயிற்று; "வாய்புகுவதனினும்" என்புழிப்போல,
புகுவார் : வினைப்பெயர். (18)
|