வழுதியர் பெருமான் றன்பாற் கந்தனே வந்தா னென்பார்
பழுதறு கற்பி னாடன் பாக்கிய மிதுவே யென்பார்
அழகினான் மதனும் பெண்மை யவாவுறு மிவன்கோ லாணை
எழுகட லுலகோ வைய மேழையுங் காக்கு மென்பார். |
(இ
- ள்.) வழுதியர் பெருமான் தன்பால் - இப்பாண்டியர் பெரு
மானிடத்து, கந்தனே வந்தான் என்பார் - முருகனே வந்து தோன்றினான்
என்று (சிலர்) கூறுவர்; பழுது அறு கற்பினாள் தன் பாக்கியம் இதுவே
என்பார் - குற்றமற்ற கற்பினையுடைய தடாதகைப் பிராட்டியாரின் புண்யிம்
இம்மகப்பேறே என்று (சிலர்) கூறுவர்; அழகினால் மதனும் பெண்மை
அவாவுறும் இவன் கோல் ஆணை - கட்டழகினால் மன்மதனும்
பெண்தன்மையை விரும்பற்கொத்த இக்குமாரனது செங்கோலின்
ஆணையானது, எழுகடல் உலகோ - ஏழு கடலாற் சூழப்பட்ட இந்நில
வுலகம் ஒன்றனை மட்டுமா காப்பது. வையம், ஏழையும் காக்கும் என்பார் -
ஏழுலகங்களையும் பாதுகாக்குமென்று (சிலர் கூறுவர்) எ - று.
கந்தன்
- ஆறு திருவுருவமும் ஒன்றாகச் சேர்க்கப் பட்டவன்.
பாக்கியமே இது என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டலுமாம். மன்மதனும்
பெண்ணாகி நுகர்தற்கு விரும்பும் அழகு;
"அனங்கனுக்
கவலஞ் செய்யு மண்ணல்" |
எனச் சிந்தாமணியும்,
"ஆடவர் பெண்மையை
யவாவுந் தோளினாய்" |
எனப் கம்பராமாயணமும்
கூறுவன இங்கு நோக்கற்பாலன. உலகென்பது
நிலமென்னும் சிறப்புப் பொருளிலும், வைய மென்பது உலக மென்னும்
பொதுப் பொருளிலும் வந்தன. (19)
மனிதர்வான் றவமோ தென்பார் வைகுவோர் தவமோ வானப்
புனிதர்வான் றவமோ வேள்விப் பூசுரர் தவமோ கேள்வி
முனிவர்வான் றவமோ வீறு முதலிலா முதல்வ னுள்ளக்
கனிதரு கருணை போலிக்காதலன் றோற்ற மென்பார். |
(இ
- ள்.) ஈறு முதல் இலா முதல்வன் - முடிவும் முதலுமில்லாத
இறைவனது, உள்ளம் கனிதரு கருணைபோல் - திருவுள்ளத்தின் கனிந்த
கருணைபோலும், இ காதலன் தோற்றம் - இப்புதல்வனது அவதாரத்திற்குக்
காரணம், மனிதர் வான் தவமோ - மக்களின் உயர்ந்த தவமோ, தென்பார்
வைகுவோர் தவமோ - பாண்டி நாட்டிலுள்ளோர் செய்த தவமோ, வானப்
புனிதர் வான் தவமோ - வானுலகத்துள்ள தூய தேவர்களின் மேலாய
தவமோ, வேள்வி பூசுரர் தவமோ - வேள்வி வேட்கம் மறையோரின் தவமோ,
கேள்வி முனிவர் வான் தவமோ - கேள்வில்வல்ல முனிவர்களின் சிறந்த
தவமோ, னெ்பார் - என்று (பலர்) கூறுவார் எ - று.
நிலவுலகிலுள்ள
எல்லா மக்களும் புரிந்த தவமோ என்பார் மனிதர்
வான் றவமோ என்றார். மனிதர் தவம் முதலாகக் கூறிய இவற்றுள்
|