யாதோ என்க; இவை
யெல்லாமும் காரண மாகல் வேண்டுமென்பது குறிப்பு.
உள்ளக் கருணையென இயையும். தோற்றம் என்பது அதன் காரணத்திற்
காயிற்று. போல் என்பது போலும் எனப் பெயரெச்சப் பொருட்டு (20)
தருமமா தவத்தின்
பேறோ அருத்தமா தவத்தின் பேறோ
பெருமைசால் காம நோற்ற பெருந்தவப் பேறோ வெய்தற்
கருமையாம் வீடு நோற்ற வருந்தவப் பேறோ விந்தத்
திருமக னென்று தம்மில் வினாய்மகிழ் சிறப்பச் சென்றார். |
(இ
- ள்.) இந்த திருமகன் - இச்செல்வப் புதல்வனின் (தோற்றம்).
தருமம் மாதவத்தின் பேறோ - அறத்தினது பெரிய தவத்தின் பயனோ,
அருத்தம் மாதவத்தின் பேறோ - பொருளினது பெருந் தவத்தின் பயனோ,
பெருமை சால் காமம் நோற்ற பெருந்தவப் பேறோ - பெருமை மிக்க
இன்பமானது புரிந்த பெரிய தவத்தின் பயனோ, எய்தற்கு அருமையாம் வீடு
நோற்ற அருந்தவப் பேறோ - அடைதற்கு அரிய வீடானது இயற்றிய அரிய
தவத்தின் பயனோ, என்று தம்மில் வினாய் - என்று தம்முள்
(ஒருவருக்கொருவர்) வினாவிக்கொண்டு, மகிழ் சிறப்ப சென்றார் - மகிழ்ச்சி
மிகச் சென்றார்கள் எ - று.
இத்
திருமகன் உறுதிப் பயன்களாகிய அறம் முதலிய நான்கனையும்
நிலவச் செய்வானென்பது கருதி அவற்றின் தவப் பேறோ என்றா ரென்க.
பெருமை சால் காமம் - ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஈருடம்பிற் கோருயிரனையராய்க்
கூடி நுகரும் இன்பம். மேற் செய்யுளில் உரைத்தாங்கும்
உரைத்துக் கொள்க. இவ்விரு செய்யுளிலும் ஓகாரங்கள் வினாப் பொருளன.
வினாவி யென்பது வினாய் எனத் திரிந்தது. (21)
அவ்வவர் மனைக டோறு மங்கல வணிக ளாகக்
கௌவைமங் கலங்க ளார்ப்பக்* கடிநக ரெங்கும் பொங்க
நெய்விழா வெடுப்பக் கேள்வி நிரம்பிய மறையோர்க் கீந்த
தெய்வமா தான நீத்தந் மிரைக்கடன் மடுத்த தம்மா. |
(இ
- ள்.) அவ்வவர் மனைகள் தோறும் - அவரவர்கள் இல்லங்கள்
தோறும், மங்கல அணிகளாக - மங்கல விழாவாகக் கொள்ளுதலால்,
கௌவை மங்கலங்கள் ஆர்ப்ப - (யாவர் மனையிலும்) ஒலியை யுடைய
மங்கல வாத்தியங்கள் முழங்கவும், கடி நகர் எங்கும் - காவலையுடைய
மதுரைப்பதி முற்றும், பொங்க நெய் விழா எடுப்ப - சிறக்க எண்ணெயாட்டு
விழா எடுக்கவும், கேள்வி நிரம்பிய மறையோர்க்கு ஈந்த - கேள்வியில் வல்ல
அந்தணர்களுக்குக் கொடுத்த, தெய்வ மா தான நீத்தம் - தெய்வத்தன்மை
பொருந்திய பெரிய தான நீரின் பெருக்கு, திரைக்கடல் மடுத்தது -
அலைகளையுடைய கடலிற் புகுந்தது எ - று.
மங்கல
வணிகளாகக் கொள்ளப் படுதலால் என்க. ஆர்ப்பு எனப்
பாடமோதி, ஆர்ப்புப் பொங்க என முடிப்பாரு முளர். நெய்விழா -
(பா
- ம்.) * மங்கலங்க ளார்ப்பு.
|