I


உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம்527



கருவுயிர்த்த பத்தாம்நாளிற் செய்யப்படும் எண்ணெயாட்டுவிழா; இதனை
‘நெய்யணி மயக்கம்’ என்பர் தொல்காப்பியர்;

"புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில்
நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி"

என்பது காண்க; ‘கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய் விழாக்
குளிப்ப நல்கி’ எனப் பிராட்டியார் திருவவதாரத்திற் கூறுதலும் நோக்குக.
ஆர்ப்ப, எடுப்ப என்னும் செயவெனேச்சங்கள் ஈந்த என்னம் பெயரெச்ச
வினை கொண்டன. தானம் - ஈண்டுத் தானஞ் செய்தற்கு வார்த்தநீர்.
அம்மா : வியப்பிடைச் சொல். (22)

சுண்ணமும் பொரியுந் தூவெள் ளரிசியுந் தூர்வைக் காடுந்
தண்ணறுஞ் சிவிறி வீசு தண்பனி நீருஞ் சாந்தும்
எண்ணெயு நானச் சேறும் பசையற வெடுத்து வாரிக்
கண்ணக னகர மெங்குங் கழுவின தான வெள்ளம்.

     (இ - ள்.) தான வெள்ளம் - அந்தத் தான நீர் வெள்ளமானது,
சுண்ணமும் - (மகிழ்வாற் சிந்திய) பொற் சுண்ணத்தையும், பொரியும் - நெற்
பொரியையும், தூவெள் அரிசியும் - தூய வெள்ளிய அரிசியையும், தூர்வைக்
காடும் - அறுகின் குப்பையையும், சிவிறி வீசும் தண் நறும் பனி நீரும் -
துருத்தியால் வீசப்பெற்ற குளிர்ந்த மணமுள்ள பனி நீரையும், தண் சாந்தும்
- தட்பமுள்ள சந்தனத்தையும், எண்ணெயும் - எண்ணெயையும், நானச்சேறும்
- கத்தூரிக் குழம்பையும், பசை அற வாரி எடுத்து - பசை இல்லையாக வாரி
யெடுத்து, கண் அகல் நகரம் எங்கும் கழுவினது - இடமகன்ற நகரம்
முழுதையும் தூய்மை செய்தது எ - று.

     தூர்வை - அறுகம்புல். சிவிறி - துருத்தி. கழுவினது என்னும் துவ்வீறு
தொக்கது. (23)

செம்பொன்செய் துருத்தி தூம்பு செய்குழல் வட்ட மாக
அம்பொன்செய் சிவிறி வெண்பொ னண்டைகொண் டாரந்                                         தூங்கும்
வம்பஞ்சு முலையி னாரு மைந்தரு மாறி யாட
அம்பஞ்சு மாறி மாறி யனங்கனு மாடல் செய்வான்.

     (இ - ள்.) ஆரம் தூங்கும் வம்பு அஞ்சும் முலையினாரும் - முத்தாரம்
தொங்கி யசையும் கச்சு அஞ்சுத் தனங்களையுடைய மகளிரும், மைந்தரும் -
ஆடவரும், சொம்பொன் செய் துருத்தி - சிவந்த பொன்னாற் செய்த
துருத்தியையும், தூம்பு செய்குழல் - தொளை செய்த குழலையும், வட்டம்
ஆக அம் பொன் செய் சிவிறி - வட்டமாக அழகிய பொன்னாற் செய்த
சிவிறியையும், வெண் பொன் அண்டை கொண்டு - வெள்ளியாலாகிய
அண்டையையுங் கொண்டு, மாறி ஆட - ஒருவர்மே லொருவர் மாறி மாறி
வீச, அனங்கனும - மதவேளும், அம்பு அஞ்சும் மாறி மாறி ஆடல்
செய்வான் - ஐந்து பாணங்களையும் (அவர்கள் மேல்) மாறி மாறி
விடுவானாயினான் எ - று.

     துருத்தி, குழல், சிவிறி, அண்டை யென்பன நீர் வீசுங் கருவி
விசேடங்கள், ஆரந் தூங்கும் முலை, அஞ்சும் முலை யெனத் தனித்தனி