I


528திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கூட்டுக கிழ்த்துவிடுமென வம்பு அஞ்சு மென்க. ஐந்து அஞ்சு எனப்
போலியாயிற்று. வெவ்வேறம்புகளை விடுத்தா னென்பார் ‘மாறி மாறி’
என்றார்; மகளிர் மேலும் மைந்தர்மேலும் மாறி விடுத்தான் என்னலுமாம்.
ஆடல் செய்தல் - போர் புரிதல். (24)

இன்னணங் களிப்ப மூதூ ரிந்துவா திரைநன் னாளிற்
பொன்னவன் கேந்தி ரித்த புனிதலக் கினத்திற் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி யாதி
மன்னவர்க் கியன்ற வேத மரபினால் வயங்க வாற்றி.

     (இ - ள்.) முது ஊர் இன்னணம் களிப்ப - பழமையாகிய மதுரைப்
பதி இவ்வாறு மகிழ, இந்து ஆதிரை நல் நாளில் - திருவா திரையோடு கூடிய
திங்கட்கிழமையாகிய நல்ல நாளில், பொன்னவன் கேந்திரித்த புனித
லக்கினத்தில் போந்த - வியாழ கேந்திரித்த தூய லக்கினத்தில் அவதரித்த,
தென்னவர் பெருமான் சேய்க்கு - செழீயர் பெருமானாகிய சுந்தர
பாண்டியரின் திருக் குமாரருக்கு, சாதகச்செய்தி ஆதி - சாதகன்ம
முதலியவற்றை, மன்னவர்க்கு இயன்ற வேதமரபினால் வயங்க ஆற்றி -
அரசர்களுக்குப் பொருந்திய வேத நெறியினால் விளங்கச்செய்து எ - று.

     ‘இந்து வாதிரை நன்னாளிற் பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினம்’
முன்னரே பெறப்படினும், ஈண்டுச் சாதகச் செய்தி ஆற்றி யென்பதற்கேற்ப
அநுவதித்தார். ஆதி வேதமென இயைத்தலுமாம். (25)

கரியவெண் டிரைநிர்ச் செல்வன் கல்லிற கரிந்த வென்றித்
தெரியல னுலகந் தாங்கு தெய்வத வரைக்கோ னாதித்
தரியலர் வீரஞ் சிந்தத் தருக்கழிந் தச்சந் தோற்றற்
குரியகா ரணத்தா னாம முக்கிர வரும னென்பார்.*

     (இ - ள்.) கரிய வெள்திரை நீர்ச் செல்வன் - பெரிய வெள்ளிய
அலைகளையுடைய கடற் செல்வனாகிய வருணனும், கல் இறகு அரிந்த
வென்றித் தெரியலன் - மலையின் சிறைகளை அறுத்த வெற்றிமாலையைத்
தரித்த இந்திரனும், உலகம் தாங்கு தெய்வத வரைக்கோன் - உலகினைத்
தாங்குகின்ற தெய்வத்தன்மை பொருந்திய மேருவென்னும் மலையரசனும்,
ஆதி தரியலர் - முதலிய பகைவர்கள், வீரம் சிந்த தருக்கு அழிந்து அச்சம்
தோற்றற்கு உரிய காரணத்தால் - தன்னைக் கண்ட பொழுதே (தங்கள்)
வீரங்கெடச் செருக்கழிந்து அச்சந் தோன்றச் செய்தற்குரிய காரணத்தினால்,
நாமம் உக்கிர வருமன் என்பார் - பெயர் உக்கிர வருமன் என்றார்கள் எ-று.

     கருமை - பெருமை; கரிய செல்வன் என இயைத்தலுமாம். அரிந்த
வென்னும் பெயரெச்சம் தெரியலன் என்பதன் விகுதியைக் கொண்டது.
மலைகள் உலகினைத் தாங்குதலைப் பூதரம் என்னும் பெயரானுமறிக.
அழிந்து என்னும் வினையெச்சம் தோன்றுதலாகிய தன் வினை கொண்டு