சந்தவெற் படைந்து வேட்டஞ செய்துமச் சைல வாழ்க்கை
அந்தண ராசி கூற வவர்தொழில் வினாயு மன்னார்
கந்தமென் கனிவி ருத்தூண்* கைதழீஇக் களித்து மீண்டும்
இந்தவா றைம்மூ வாண்டு கழியமே லெய்து மாண்டில். |
(இ
- ள்.) சந்தவெற்பு அடைந்து வேட்டம் செய்தும் - சந்தன
மரங்களையுடைய பொதியின் மலையைச் சார்ந்து வேட்டையாடியும் அசைல
வாழ்க்கை அந்தணர் ஆசிகூற - அம் மலையில் வாழ்தலை யுடைய
முனிவர்கள் வாழ்த்துக் கூற, அவர் தொழில் வினாயும் - அவர் தவத்தொழில்
(முட்டின்றி முடிதலை) வினவியும், அன்னார் கந்தம் மென்கனி விருத்து ஊண்
கைதழீஇ களித்து மீண்டும் - அம்முனிவர் (மகிழ்ந்தளிக்கும்) கிழங்கும்
மெல்லிய பழமும் ஆகிய விருந்துணவைக் கைக்கொண்டு மகிழ்ந்து
திரும்பியும். இந்தவா ஐம் மூவாண்டு கழிய - இவ்வாறாகப் பதினைந்து
ஆண்டுகள் செல்ல, மேல் எய்தும் ஆண்டில் - பதினாறாம் ஆண்டின்கண்
எ - று.
சைலம்
- மலை; சிலையாலாயது. அநத்ணர் - துறவோர்;
"அந்தணரென்போ ரறவோர்" என்பது திருவள்ளுவப் பயன். தொழில் -
தவத்தொழிலின் நடைபேறு. வினாவி தழுவியென்பன வினாய் தழீஇ எனத்
திரிந்தன. விருந்து விருத்து என வலித்தல் விகாரமாயிற்று. பதினைந்தின்
மேலெய்தும் ஆண்டாவது பதினாறாம் ஆண்டு. (33)
சூர்முத றடிந்த
தங்க டோன்றலே யிவனென் றெண்ணிக்
கார்முக மயிலும் வேலுங் கைவிடாக் காக்கு+ மாபோல்
வார்முக முலையி னாரும் வடிக்கணு மருங்கு மொய்ப்பக்
கூர்முக வேலா னின்ன கொள்கைய னாகத் தாதை. |
(இ
- ள்.) சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவனென்று எண்ணி
- சூரபன்மனாகிய மாமரத்தின் அடியைத் துணித்த தங்கள் தலைவனாகிய
முருகக்கடவுளே இவனென்று கருதி, கார்முக மயிலும் வேலும் கைவிடாக்
காக்குமாபோல் - கரிய முகமுள்ள மயிலும் வேற்படையும் நீங்காது காக்கின்ற
தன்மைபோல, வார்முக முலையினாரும் - கச்சணிந்த இடத்தினையுடைய
கொங்கைகளையுடைய மகளிரும், வடிக்கணும் - (அவர்) மாவடுவின்
பிளவையொத்த கண்களும், மருங்கு மொய்ப்ப - பக்கத்தே சூழ, கூர்முக
வேலான் இன்ன கொள்கையனாக - கூரிய முனைபொருந்திய
வேற்படையையுடைய உக்கிரவழுதி இத்தன்மையுடையராக, தாதை -
தந்தையாகிய சுந்தர பாண்டியர் எ - று.
"சூர்முத றடிந்த
சுடரிலை நெடுவேல்" |
என்பது திருமுருகாற்றுப்படை.
மேகத்தை விரும்புதலையுடைய மயில்
என்னலுமாம்; இப்பொருட்கு முக என்பது முகத்தல் என்பதன் முதனிலை.
விடா : ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். காக்குமா : விகாரம். (34)
(பா - ம்.)
* விருந்தூண். +கைவிடா காக்கு.
|