வலம்புரி யென்ன வாய்ந்த கண்டமு மலராண் மன்னும்
பொலம்புரி கமல மன்ன வதனமும் பொதுவா னோக்கி
நிலம்புரி தவப்பே றன்னான் வடிவெலா நின்று நின்று
நலம்புரி நூலா னோக்கிச் சோதிப்பா னடிக்க வல்லான். |
(இ
- ள்.) வலம்புரி என்ன வாய்ந்த கண்டமும் - வலம்புரிச்
சங்கினைப்போல அமைந்த கழுத்தையும், மலராள் மன்னும் பொலம்புரி
கமலம் அன்ன வதனமும் - திருமகள் வதியும் பொன்னாற் செய்த தாமரை
மலரையொத்த முகத்தையும், நடிக்க வல்லான் - திருக்கூத்தாட வல்லவனாகிய
சுந்தரபாண்டியன், பொருவால் நோக்கி - (முன்) பொதுவகையாற் பார்த்துப்
(பின்), நிலம்புரி தவப்பேறு அன்னான் வடிவு எலாம் - நிலவுலகத்தார் செய்த
தவப்பயனை ஒத்த அவ்வுக்கிர வழுதியினது உறுப்புக்களனைத்தையும்,
நலம்புரி நூலால் நின்று நின்று நோக்கிச் சோதிப்பான் - அழகினைச்
சொல்லுகின்ற நூலிற் கூறிய முறைப்படி உற்றுற்று நோக்கிச்
சோதிப்பானாயினன். எ - று.
நிலம்
- நிலமகளுமாம். நலம்புரிநூல் - சாமுத்திரிகை நூல். (37)
உன்னத மாறு நீண்ட வுறுப்பைந்து சூக்கந் தானும்
அன்னது குறுக்க நான்கா மகலுறுப் பிரண்டே ழாகச்
சொன்னது சிவப்பு மூன்று கம்பீரந் தொகுத்த வாறே
இன்னவை விரிக்கி லெண்ணான் கிலக்கண வுறுப்பா மென்ப. |
(இ
- ள்.) உன்னதம் ஆறு - உயர்ந்த உறுப்புக்கள் ஆறும், நீண்ட
உறுப்பு ஐந்து - நீட் உறுப்புக்கள் ஐந்தும், சூக்கும் தானும் அன்னது -
சிறுகிய உறுப்புகள் ஐந்தும், குறுக்கம் ஆம் நான்கு - குறுக்கமாகிய
உறுப்புக்கள் நான்கும், அகல் உறுப்பு இரண்டு - அகன்ற உறுப்புக்கள்
இரண்டும், சொன்னது சிவப்பு ஏழு - நூலிற் கூறிய சிவந்த உறுப்புக்கள்
ஏழும், கம்பீரம் மூன்று - ஆழ்ந்த உறுப்புக்கள் மூன்றும், ஆக எண் நான்கு
உறுப்பு இலக்கணம் என்ப - ஆக முப்பத்திரண்டு உறுப்புக்கள் இலக்கண
முடையன என்று பெரியோர்கூறுவர்; தொகுத்தவாறே - (இங்ஙனம்)
தொகுத்துக் கூறிய முறையே, இன்னவை விரிக்கின் - இவற்றை விரித்துக்
கூறுங்கால் எ - று.
அன்னது
- அத்தொகையினது. தான், ஆம் : என்பன அசைகள். (38)
வயிறுதோ ணெற்றி நாசி மார்புகை யடியிவ் வாறும்
உயரில்வான் செல்வ னாகு மொளிகவர் கண்க போலம்
புயல்புரை வள்ளற் செங்கை புதுமணங் கவருந் துண்டம்
வியன்முலை நடுமார் பைந்து நீண்ட வேல் விளைக்கு நன்மை. |
(இ
- ள்.) வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கைஅடி இவ்வாறும்
உயரில் - வயிறும் தோளும் நெற்றியும் மூக்கும் மார்பும் கையினடியுமாகிய
இந்த ஆறு உறுப்புக்களும் உயர்ந்திருந்தால், வான் செல்வன் ஆகும் -
சிறந்த செல்வமுடையவனாவான்; ஒளி கவர் கண் கபோலவும் ஒளியைக்
|