கொள்கின்ற கண்ணும்
கபோலமும், புயல் புரை வள்ளல் செங்கை - முகிலை
ஒத்த வண்மையையுடைய சிவந்த கையும், புதுமணம் கவரும் துண்டம் - புதிய
மணத்தினை நுகரும் மூக்கும், முலை நடு வியன்மார்பு ஐந்தும் - முலையின்
நடுவிலுள்ள பரந்த மார்பும் ஆகிய ஐந்து உறுப்புக்களும், நீண்டவேல் நன்மை விளைக்கும்
- நிண்டுள்ளனவாயின் (அவை) நன்மையைக் கொடுக்கும் எ - று.
வள்ளல்
என்றது ஈண்டு வண்மையை யுணர்த்திற்று. நாசி யென்றது
மூக்கின் அடியை யெனவும், துண்டம் என்றது மூக்கின் முனையை யெனவும்
கொள்க. (39)
நறியபூங்
குஞ்சி விரற்கணு நகம்பல் லைந்துஞ்
சிறியவே லாயுள் கோசஞ் சங்கைநா முதுகிந் நான்குங்
குறியவேற் பாக்கி யப்பே றாஞ்சிரங் குளமென் றாய்ந்தோர்
அறியுமிவ் வுறுப்பி ரண்டு மகன்றவே லதுவு நன்றாம். |
(இ
- ள்.) நறிய பூங்குஞ்சி - நன்மணங் கமழும் மலரையணிந்த
சிகையும், தொக்கு - தோலும், விரல்கணு - விரலின்கணுவும், நகம் - நமகும்,
பல் - பல்லும், ஐந்தும் சிறிய வேல் ஆயுள் - ஆகிய ஐந்துறுப்புகளும்
சிறுகியவாயின் ஆயுள் (மிகும்); கோசம் சங்கை நா முதுகஇ நான்கும் -
ஆண்குறியும் கணைக்காலும் நாவும் முதுகும் ஆகியஇந்நான்குறுப்புக்களும்,
குறியவேல் பாக்கியப் பேறு ஆம் - குறுகிய வாயின் செல்வப்பயன் ஆகும்;
ஆய்ந்தோர் அறியும் சிரம் குளம் என்று இவ்வுறுப்பு இரண்டும் அகன்றவேல்
- தெளிந்தோர் அறியும் தலையும் நெற்றியும் ஆகிய இவ்விரண்டுறுப்புகளும்
அகன்றனவாயின், அது நன்றாம் - அவ்வகற்சியும் நன்மையாகும் எ - று.
ஆய்ந்தோர்
- நூல்களை ஆராயந்தோர். குளம் - நெற்றி. அதுவும்,
உம் : அசை. (40)
அகவடி யங்கை நாட்டக் கடையித ழண்ண நாக்கு
நகமிவை யேழுஞ் சேந்த நன்மையாற் பெறுமா வின்பம்
இகல்வலி யோசை நாபி யென்றிவை மூன்று மாழ்ந்த
தகைமையா லெவர்க்கு மேலா நன்மைசா றக்கோ னென்னா. |
(இ
- ள்.) அக அடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு
நகம் இவை ஏழும் - உள்ளங்காலும் உள்ளங்கையும் கடைக் கண்ணும்
உதடும் மேல்வாயும் நாவும் நகமும் ஆகிய இவ்வேழுறுப்புக்க ளும், சேந்த
நன்மையால் மா இன்பம் பெறும் - சிவந்திருக்கும் நன்மையினாலே பெரிய
இன்பத்தை அடைவான்; இகல் வலிஓசை நாபி என்ற இவை மூன்றும் - மிக்க
வலியும் ஓசையும் கொப்பூழும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும், ஆழ்ந்த்
தகைமையால் - ஆழ்ந்திருக்குந் தகுதியாலே, எவர்க்கும் மேலாம் நன்மை
சால் தக்கோன் - யாவருக்கும் மேலாகியநலம் நிறைந்த தக்கோனாவன்;
என்னா - என்று கருதி எ - று.
அங்கை
அகங்கை;
|