I


54திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மனமுருகி, ஒல்லை ஊற்று - விரைந்து சொரிகின்ற, பால்வெள்ளத்துள்
உகள்வன - பால் வெள்ளத்திலே தாவுவன எ - று.

     முல்லையாழ் - முல்லைப்பண். மருதம் - மருதப்பண். பயிற்றி,
பயின்று என்பதன் பிறவினை. வண்டுகளுக்குப் பயிற்றி எனப் பொருள் கூறி,
உருபுமயக்கம் என்னலுமாம்.

"குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை"
"ஆவு மெருமையு மவைசொலப் படுமே"

என ஆசிரியர் தொல்காப்பியனார் விதித்திருத்தலின் ஆன்கன்றைக் குழவி
யென்றார், முல்லைக்கும் மருதத்திற்கும் மயக்கங் கூறியவாறு. (38)

கரும்பொற் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றை பொன்சொரிவ
அருந்த டங்கடல் வளையெடுத் தாழியான் கையில்
இருந்த சங்கென விறைகொளப் பூவைமே லெறிவ.

     (இ - ள்.) கரும்பொன் கோட்டு - இரும்புபோலும் கரியகொம்பு
களையுடைய, இளம் புன்னைவாய் கள் உண்டு - இளமையாகிய புன்னை
மலரின் தேனைப்பருகி, காளை சுரும்பு - ஆண்வண்டுகள், செவ்வழிப்
பாண் செய - செவ்வழிப் பண்ணைப் பாட, கொன்றை பொன் சொரிவ -
கொன்றை மரங்கள் (கொடையாளர்போல) பொன்போரும் பூக்களைப்
பொழிவன; அரும் தடம் கடல் அளத்தற்கரிய பெரிய கடலாளைப்
பொழிவன; அரும் தடம் கடல் - அளத்தற்கரிய பெரிய கடலானது,
வளைஎடுத்து - தன்னிடத்துள்ள சங்கினை எடுத்து, ஆழியான் கையில்
இருந்த சங்கு என இறைகொள - சக்கரப் படையையுடைய திருமாலின்
கையில் இருந்த பாஞ்சசந்நிய மென்னுஞ் சங்குபோலத் தங்கும்படி, பூவை
மேல் எறிவ - காசாஞ் செடிமீது எறிவன எ - று.

     கரும்பொன் - இரும்பு. புன்னை நெய்தலுக்கும், பூவை முல்லைக்கும்
உரியன. செவ்வழி - நெய்தற்பண். பாண்செயல் - பாடுதல். பொன்போலும்
பூவைப் பொன் என்றார். மேலுரைத்தது காண்க. சுரும்பு பாணராகவும,்
கொன்றை பரிசிலளிப்போராகவும் தோன்றுமாறு நயம்படக் கூறினார்.

"வரைச்சேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைச்சேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலை யாமே"

என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கும் காண்க. பூவைமா யோன்
போலுமாகலானும், அவனும் முல்லைக் குரியனாகலானும், அவன்
கையிலிருந்த சங்குபோல வென்றார். இறைகொளல் - இறுத்தல்; தங்குதல்.
முல்லைக்கும் நெய்தலுக்கும் மயக்கங்கூறியவாறு. (39)

கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலாக் கனிகீண்
டழிந்த தேனுவர்க் கேணிபாய்ந் தகற்றுவ வுவரை
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
றொழிந்த தாமரைப் போதுபுக் கொளிப்பன கெண்டை.