I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்541



பெருமான் குமரனுக்கு - செழியர் பெருமானாகிய சுந்தரபாண்டியனுடைய
திருக்குமாரனுக்கு, கொடுத்தி என்று செப்புதலும் - கொடுப்பாய் என்று கூறிய
வளவில் எ - று.

"அன்னம் பயில்பொழி லாலவாயின்
மன்னிய சிவன்யான்"

எனத் திருமுகப் பாசுரத்தில் தொடர் ஈண்டுச் சிந்திக்கற்பாலது; ஆம் என்பது
பிரித்துக் கூட்டப்பட்டது. கொடுத்தி : ஏவலொருமை. இ : விகுதி; த் :
எழுத்துப் பேறு. செப்புதலும் : வினையெச்சம். (5)

உள்ளக் கமல முககமல முடனே மலர விருதடங்கண்
அள்ளற் கமல மலர்ந்துதன தங்கைக் கமல முகிழ்த்தெழுந்து
வள்ளற் பரமன் கருணையெளி வந்த செயலை நினைந்தபின்
வெள்ளத் தழுந்தி யெழுந்திரவி வேலை முளைக்கும் வேலையினில்.

     (இ - ள்.) உள்ளக் கமலம் முக கமலம் உடனே மலர - நெஞ்சத்
தாமரை முகத்தாமரை யுடனே மலரா நிற்க, இருதடம் கண் அள்ளல் கமலம்
மலர்ந்து - சேற்றிலுண்டாகிய தாமரை மலர் போலும் பெரிய இரு கண்களும்
விழித்து, தனது அம் கைக்கமலம் முகிழ்த்து எழுந்து - தனது அழகிய கைத்
தாமரைகளைக் கூப்பி எழுந்து; வள்ளல் பரமன் கருணை எளி வந்த செயலை
நினைந்து - வள்ளலாகிய சிவபெருமான் கருணை தனக்கு எளிதிற் கிட்டிய
செயலை நினைந்து, அன்பின் வெள்ளத்து அழுந்தி எழுந்தது - அன்பாகிய
வெள்ளத்தில் மூழ்கி யெழுந்து, இரவி வேலை முளைக்கும் வேலையினில் -
சூரியன் கடலிற் றோன்றும் வேளையில் எ - று.

     கமலக் கண் மலர்ந்து என வியைக்க. கண் மலர்த்ல் - விழித்தல்.
எளிவந்த : ஒரு சொல். தடங்கண் அள்ளற் கமலம் மலர்ந்து அங்கைக்
கமலம் முகிழ்த்து என்பது பொருள் முரண். வேலை முளைக்கும்
வேலையினில் என்பது ஓர் வகை எதுகை நயம். (6)

நித்த நியமக் கடனிரப்பி நிருப னமைச்ச ரொடுநான்கு
பைத்த கருவிப் படையினொடு பலவே றியமுங் கலிப்பத்தன்
பொய்த்த மருங்குற் றிருமகளைப் பொன்ன னாரோ டிரதமிசை
வைத்துமணஞ்சேர் திருவினொடும் மதுரை நோக்கிவழக் கொண்டான்.

     (இ - ள்.) நித்தம் நியமக் கடன் நிரப்பி - நாடொறுஞ் செய்யும்
நியமமாகிய கடன்களைக் குறைவின்றி முடித்து, நிருபன் - சோம சேகரன்,
அமைச்சரொடு நான்கு பைத்த கருவிப் படையினொடு - மந்திரிகளோடும்
நான்காகிய பரந்த சேனைகளோடும், பலவேறு இயமும் கலிப்ப - பல வேறு
பட்ட இயங்களும் ஒலிக்க, தன் பொய்த்த மருங்குல் திருமகளை -
பொய்யாகிய இடையினை யுடைய தன் புதல்வியாகிய காந்திமதியை, பொன்
அனாரோடு - திருமகன் போலும் தோழி களோடு, இரத மிசை வைத்து -
தேரின்மேல் வைத்து, மணம் சேர் திருவினொடு மதுரை நோக்கி
வழிக்கொண்டான் - திருமணத்திற்குப் பொருந்திய செல்வத்தோடு
மதுரைப்பதியை நோக்கிச் செல்லுதலுற்றான் எ - று.