பைத்த - பரந்த வென்னும்
பொருட்டு, கருவியாகிய படையென இரு
பெயரொட்டு; கருவி சேனை யாதலை "பொருள் கருவி காலம்" என்னும்
திருக்குறளானறிக. பொய்த்த - இடை யுண்டென்பதே பொய்யாகிய; இடை
மிகவும் சிறிதா யிருத்தலை அதிசயோக்தி வகையால் இங்ஙனம் கூறுவர்;
"கண்கொளா நுடங்
கிடையை
உண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லாம்
உண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே" |
என்பது சீவகசிந்தாமணி.
(7)
நென்ன லெல்லை மணம்பேச
நினைந்த வாறே யமைச்சர்மதி
மன்னர் பெருமான் றமரோடு
மணவூர் நோக்கி வழிவருவார்
அன்ன வேற்தன் றனைக்கண்டா
ரடல்வேற் குமர னனையானெந்
தென்னர் பெருமான் குமரனுக்குன்
றிருவைத் தருதி யெனவனையான். |
(இ
- ள்.) அமைச்சர் - மந்திரிகள், நென்னல் எல்லை மணம் பேச
நினைந்தவாறே - நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த
வண்ணமே, மதி மன்னர் பெருமான் தமரோடும் - சந்திர மரபில் வந்த
அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியனுடைய சுற்றத்தாரோடும், மணவூர்
நோக்கி வழி வருவார் - மணவூரை நோக்கி வழிக்கொண்டு வருகின்றவர்கள்,
அன்னவேந்தன்தனைக் கண்டார் - அச்சோமசேகர மன்னனைக் கண்டு,
அடல் வேல் குமரன் அனையான் - வெற்றி பொருந்திய வேலை யேந்திய
முருகக் கடவுளை ஒத்தவனாகிய, எம தென்னர் பெருமான் குமரனுக்கு - எம்
பாண்டியர் பெருமான் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் திருவைத்
தருதி என - உன் புதல்வியைத் தருவாய் என்று கூற, அனையான் - அம்
மன்னன் எ - று.
அமைச்சர்
வருகின்றவர் கண்டு தருதியென என்றும், குமரனனை
யானாகிய குமரனுக்கு என்றும் இயைக்க. வருவார் : வினைப்பெயர்.
கண்டார் : எச்சமுற்று. (8)
குலனங் குடியுங் கனவின்கட்
கொன்றை முடியார் வந்துரைத்த
நலனுங் கூறி மணநேர்ந்து
நயப்ப வதனை நன்முதியோர்
புலனொன் றுழையர் தமைவிடுத்துப்
பொருனைத் துறைவர்க் குணர்த்திவரு
வலுனுந் தயில்வேன் மன்னனொடு
மதுரை மூதூர் வந்தணைந்தார். |
|