I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்543



     (இ - ள்.) கனவின்கண் கொன்றை முடியார் வந்து உரைத்த -
(நேற்றிரவு) கனவினிடத்துக் கொன்றை வேணியர் எளிவந்து கூறி யருளிய,
குலனும் குடியும் நலனும் கூறி - குலமும் குடிப்பிறப்பும் மேம்பாடும் கூறி,
மணம் நேர்ந்து நயப்ப - (வினவிய) மணத்திற்கு உடன் பட்டு விரும்ப,
அதனை - அச்செய்தியை, நல் முதியோர் - நல்லறிவுடைய முதியோர்கள்,
புலன் ஒன்று உழையர் தமை விடுத்து - அறிவு பொருந்திய தூதரை அனுப்பி,
பொருளைத் துறைவற்கு உணர்த்தி - பொருனை நீர்த்துறையையுடைய
சுந்தரபாண்டியனுக்கு அறிவத்து, வரு வலன் உந்து அயில் வேல்
மன்னனொடும் - தம்மொடு வருகின்ற வெற்றியுண்டாகப் (பகைவர்மேற்)
செலுத்தப்படும் கூரிய வேற்படையையுடைய சோமசேகர மன்னனோடும்,
மதுரை மூது ஊர் வந்தணைந்தார் - தொன்மையுடையதாகிய மதுரை
நகரத்தை வந்தடைந்தார்கள் எ - று.

     குலனும் குடியும் நலனும் கொன்றை முடியார் வந்துரைத்தமையைக்
கூறியென்பது கருத்தாகக் கொள்க; தன் குலனையும், குடியையும், உரைத்த
நலனையும் கூறி யென்றுமாம். புலனொன்றல் - மனம் வேறுபடாமையுமாம்.
(9)

இரவி மருமான் மதிமருமா
     னெதிரே பணியத் தழீடமுகமன்
பரவி யிருக்கை செலவுய்த்துப்
     பாண்டி வேந்த னிருந்தான்மேல்
விரவி யமைச்சர் திருமுகங்கள்
     வேந்தர் யார்க்கும் விடுத்துநகர்
வரைவு நாள்செய் தணிசெய்ய
     மன்றல் முரச மறைவித்தார்.

     (இ - ள்.) இரவி மருமான் மதி மருமான் எதிரே பணிய - சூரியன்
வழித்தோன்றலாகிய சோமசேகரன் சந்திரன் வழித்தோன்றலாகிய
சுந்தரபாண்டியனை எதிரே சென்று வணங்க, பாண்டி வேந்தன் - அப்
பாண்டிமன்னன், தழீஇ முகமன் பரவி - அவனைத் தழுவி உபசார மொழிகள்
கூறி, இருக்கை செல உய்த்து இருந்தான் - அவனுக்கு அமைத்த
இருப்பிடத்திற் செல்லுமாறு அனுப்பியிருந்தான்; மேல் - பின்பு, அமைச்சர்
விரவி - மந்திரிகள் தம்முட்கூடி, வரைவுநாள் செய்து - திருமணநாளை
வரையறுத்து, வேந்தர் யார்க்கும் திருமுகங்கள் விடுத்து - அரச
ரனைவருக்கும் திருமணவோலை போக்கி, நகர் அணி செய்ய மன்றல் முரசம்
அறைவித்தார் - நகரை அலங்கரிக்கு மாறு மண முரசம் அறைவித்தார்கள்
எ - று.

     முகமன் பரவி - இன்மொழி கூறி. வரைவுநாள் - மணநாள். செய்தல் -
அறுதியிடல். (10)

மாடம் புதுக்கிப் பூகதமுங்
     கதலக் காடு மறுகெங்கும்
நீட நிரைத்துப் பாலிகையு
     நிறைபொற் குடமு முறைநிறுத்தி