I


544திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



ஆடு கொடியுந் தோரணமும்
     புனைவித் தழகுக் கழகாகக்
கூட நெருங்கு நகரைமணக்
     கோலம் பெருகக் கொளுத்தினார்.

     (இ - ள்.) மாடம் புதுக்கி - (அந்நகரத்தார்) தங்கள் தங்கள்
மாளிகைகளைச் சுண்ண முதலியவற்றாற் புதுக்கி, பூகதமும் கதலிக்காடும்
மறுகு எங்கும் நீட நிரைத்து - கமுகமரங்களையும் வாழைமரக் காடுகளையும்
வீதிகளெங்கும் மிக வரிசையாக நிறுத்தி, பாலிகையும் பொன்நிறை குடமும்
முறை நிறுத்தி - முளைப்பாலிகையையும் பொன்னாலாகிய நிறை குடங்களைம்
முறைப்படி வேதிகைதோறும் அமைத்து, ஆடு கொடியும் தோரணமும்
புனைவித்து - அசைகின்ற கொடிகளையும் தோரணங்களையும் கட்டி,
அழகுக்கு அழகாக - அழகக்கு அழகு செய்பவராக, கூடம் நெருங்கும்நகரை
- கூடங்கள் நெருங்கிய அப்பதியை, மணக்கோலம் பெருகக் கொளுத்தினார்
- திருமண அழகு பொலிய அலங்கரித்தார்கள் எ-று.

     பூகதம், தகரம விரித்தல். மிகுதி தோன்றக் ‘காடு’ என்றார் நீட - மிக.
இயற்கையின் அழகெல்லாம் முற்றுப்பெற்ற அந்நகர்க்கு மேலும் அழகு
செய்தாரென்பார் ‘ழேகுக் கழகாக’ என்றார். கூடம் - மண்டபம் முதலாயின.
(11)

தென்ற னாடன் றிருமகளைத்
     தேவர் பெருமான் மணம்புரிய
மன்ற லழா லொருநகரொப்
     பதிக மின்றி மதுரைநகர்
அன்று தானே தனக்கொப்ப
     தாகும் வண்ண மணியமைத்தார்
இன்று தானே தனக்கதிக
     மென்னும் வண்ண மெழிலமைத்தார்.

     (இ - ள்.) தென்றல் நாடன் திருமகளை - தென்றல் தோன்றும்
பாண்டி நாட்டினை உடையவனாகிய மலயத்துவசன் திருமகளாகிய தடாதகைப்
பிராட்டியாரை, தேவர் பெருமான் மணம்புரிய - தேவ தேவனாகிய
சுந்தரபாண்டியன் திருமணம் புரிய, மன்றல் அழகால் - அத் திருமண
அழகினால், ஒரு நகர் ஒப்பு அதிகம் இன்றி - மற்றொரு நகரம் ஈடும்
எடுப்புமில்லையாக, மதுரை நகர் தனக்குத் தானே ஒப்பது ஆகும் வண்ணம்
- மதுரைப்பதியானது தனக்குத்தானே ஒப்பாகுமாறு, அன்று அணி அமைத்தார் - அந்நாளில் அணி செய்தார்கள்; இன்று - இப்பொழுது, தனக்குத்தானே
அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார். தனக்குத்தானே மிக்கது
என்னும்படி அழகு செய்தார்கள் எ - று.

     தென்றல் - தெற்கிலிருந்து வரும் காற்று. பாண்டிய நாடு
தெற்கெல்லையிலுள்ளதாகலின் அதனைத் தென்றல் நாடு என்றார். ஒரு நகர்
- பிறிதொரு நகரும். ஒப்பதிகம் இன்றி யென்றமையாலே தனக்குத் தானே