ஒப்பென்பது பெறப்படுமாயினும்
விளங்குதற்குப் பின்னும் கூறினார். ஒப்பது,
அது : பகுதிப்பொருள் விகுதி; தன்னை யொப்பது தானேயாகும் வண்ணம்
எனினுமாம். தனக்கு அதிகம் - தன்னினும் அதிகம். (12)
[கலிவிருத்தம்]
|
முன்னர்
மாலை முடியணி சுந்தரத்
தென்ன ரேற்றின் றிருமுகங் கண்டுதாழ்ந்
தன்ன வாசக முட்கொண் டயற்புல
மன்னர் மாதவர் யாரும் வருவரால். |
(இ
- ள்.) மாலைமுடி அணி - மாலை சூழ்ந்த முடியினை அணிந்த,
சுந்தரத்தென்னர் ஏற்றின் திருமுகம் - ஆண்சிங்கம்போலும் சுந்தர
பாண்டியனது திருமுகத்தை, முன்னர் கண்டு தாழ்ந்து - தமது முன் கண்டு
வணங்கி, அன்ன வாசகம் உட்கொண்டு - அதில் வரைந்த வாசகங்களை
மனத்திற் கொண்டு, அயல்புல மன்னர் யாவரும் பெரிய தவத்தினையுடைய
முனிவர் யாவரும் வருகின்றார்கள் எ - று.
மாலையினையும்
முடியினையும் அணிந்த வென்றுமாம். பாண்டியருள்
ஏறாகிய சுந்தரனென்க. திருமுகம் - திருமணவோலை. கண்டு முன்னர்த்
தாழ்ந்து என்றலுமாம். யாவரும் என்பது யாருமென்றாயிற்று : எஞ்சாமைப்
பொருட்டு; யாருமென்பதனை மன்னரோடுங்கூட்டுக. ஆல் : அசை. (13)
புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும்
வரவிற் கால்வலி* மள்ளரின் வெள்ளமும்
வரவி யாழய வெள்ளமு முள்ளுற
இரவி தன்வழித் தோன்றல்வந் தெய்தினான். |
(இ
- ள்.) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் - குதிரை
வெள்ளமும் போர் செய்தலையுடைய யானை வெள்ளமும், வரவில் கால்வலி
மள்ளரின் வெள்ளமும் - விரைந்த செலவில் காற்றினைப் போலும்
வலியினையுடைய வீரர்களின் செய்யமும் ஆகிய இவற்றுடன், ஆழிய
வெள்ளமும் விரவி உள்ளுற - தேர் வெள்ளமும் கலந்து உள்ளே பொருந்த
(இந்நால்வகைச் சேனையுடன்), இரவிதன் வழித்தோன்றல் வந்து எய்தினான் -
சூரியன் வழித்தோன்றலாகிய சோழ மன்னன் வந்து சேர்ந்தான் எ - று.
வெள்ளம்
: ஒரு பேரெண்; ஈண்டு அளவில்லன வென்னும் பொருட்டு.
கால்வலி - தாள் வலியுமாம். ஆழிய வெள்ளம் - உருள்களை யுடைய
வெள்ளம். ஆவது தேர் வெள்ளம்; அ : அசையுமாம்; கடல் வெள்ளமும்
கீழ்ப்பட வென்றுரைப்பாருமுளர். வரைவில் கால்வலி என்று பாடங்கொண்டு,
அளவில்லாத கால்வலியையுடைய என்றுரைப்பர் ஒரு சாரார். (14)
(பா
- ம்.) * வரைவில் கால்வலி.
|