கோடு வில்லொடு மேகக் குழாங்கண்மின்
நீடு வாளொடு நேர்ந்தென மார்புதாழ்ந்
தாடு குண்டலக் காதுடை யாடவர்
சேட னீகத்துச் சேரன்வந் தீண்டினான். |
(இ
- ள்.) மேகக் குழாங்கள் - மேகக் கூட்டங்கள், கோடு
வில்லொடும் மின் நீடு வாளொடும் நேர்ந்தென - வளைந்த வில்லோடும்
மின்னலாகிய மிக்க வாளோடும் வந்தாற்போல (வில்லோடும் வாளோடும்
வந்த), மார்பு தாழ்ந்து ஆடு குண்டலக் காது உடை - மார்புவரை தொங்கி
அசையும் குண்டலத்தை யணிந்த காதுகளையுடைய, ஆடவர் - வீரர்களாகிய,
சேடு அனீகத்து - பெரிய சேனையையுடைய, சேரன் வந்து ஈண்டினான் -
சேரமன்னன் வந்து சேர்ந்தான் எ - று.
கருநிறமுடைய
வீரர்கள் வில்லும் வாளும் ஏந்தி வருதற்குக் கரிய
முகில் இந்திர வில்லோடும் மின்னலோடும் வருதல் உவமம். உவமையின்கண்
வில்லொடும் வாளொடும் என அடையடுத்தமையால் அவை பொருளுக்குங்
கொள்ளப்பட்டன. நேர்ந்தென : விகாரம். உடைய என்பது ஈறு தொக்கது.
ஆடவர் - வீரர். சேடு - பெருமை. (15)
கடலு முள்ளமுங் காற்றும்பல் வண்ணமும்
உடலுங் கொண்டென* வுந்துறு வாம்பரிப்
படுக டற்குட் பரிதியிற் றோன்றினான்
அடுப ரிப்பதி யாகிய வேந்தனே. |
(இ
- ள்.) கடலும் உள்ளமும் காற்றும் - கடலும் மனமும் காற்றுமாகிய
இம்மூன்றும், பல் வண்ணமும் உடலும் கொண்டென - பல நிறமும் பல
உடலும் கொண்டாற்போல, உந்துறு வாம்பரி படு கடற்குள் -
செலுத்தப்படுகின்ற தாவும் குதிரைப்படையாகிய ஆழ்ந்த கடலினுள், அடு
பரிப்பதி ஆகிய வேந்தன் - கொல்லுதலை யுடைய துரகபதியாகிய மன்னன்,
பரிதியில் தோன்றினான் - ஆதத்தனைப் போலத் தோன்றி வந்தான் எ - று.
குதிரைகள்
அணியணியாய் அளவின்றி யிருத்தலின் அலை
வரிசையுடன் கூடிய அளவில்லாத கடல்உருவு கொண்டாற்போல எனவும்,
விரைந்த செலவுடைமையால் உள்ளமும் காற்றும் உருவுகொண்டாற் போல
எனவும் உரைக்கப்பட்டன. குதிரைகள் பலநிறமுடையவாகலின்,
பல்வண்ணமும் உடலுங் கொண்டேன என்றார். கொண்டாலென என்பது
விகாரமாயிற்று. உந்துதல் - செலுத்துதல். வாவும் என்பதன் ஈற்றய லுயிர்மெய்
கெட்டது. படு, அடு என்பன முறையே கடலுக்கும் பரிக்கும் அடை.
இச்செய்யுள் இல்பொருளுவமையணி. (16)
அலகி லாவுத
யந்தொறு மாதவர்
அலகி லாருதித் தென்னப்பொன் னோடைசேர்
அலகி லானைய னீகமொ டெய்தினான்
அலகி லாற்றற் கயபதி யண்ணலே. |
(பா
- ம்.) * கொண்டன.
|