(இ
- ள்.) அலகு இலா உதயம் தொறும் - அளவில்லாத உதய
மலைதோறும், அலகு இலார் ஆதவர் உதித்தென்ன - அளவில்லாத சூரியர்
தோன்றினாற்போல, பொன் ஓடை சேர் அலகு இல் ஆனை அனீகமொடு -
பொன்னாலாகிய பட்டமணிந்த அளவிறந்த யானைப் படையொடும், அலகு
இல் ஆற்றல் கயபதி அண்ணல் எய்தினான் - அளவற்ற வலியையுடைய
கயபதி என்னும் மன்னன் வந்து சேர்ந்தான் எ - று.
உதயம்
என்பது உதயஞ் செய்யும் மலைக்காயிற்று. ஓடை -
நெற்றியிலணியும் பட்டம். யானைகட்கு உதய வெற்புக்களும், பொன்
னோடைகட்கு ஆதித்தர்களும் உவமம். அலகிலாராகியய ஆதவர் என்க.
உதித்தென்ன : விகாரம். யானை ஆனையென்றாயிற்று. இதுவும்
இல்பொருளுவமையணி. (17)
தொக்க மள்ள ரடிப்படு தூளிப்போய்த்
திக்க டங்க விழுங்கித் திரைக்கடல்
எக்கர் செய்ய வெழுந்தியங் கல்லென
நக்க வேற்கை நரபதி நண்ணினான். |
(இ
- ள்.) தொக்க மள்ளர் அடிப்படு தூளிபோய் - நெருங்கிய
வீரர்களின் அடிகளாலெழுந்த புழுதிபோய், திக்கு அடங்க விழுங்கி -
திசைகள் அனைத்தையும் மூடி, திரைக்கடல் எக்கர் செய்ய - அலைகளை யுடைய கடலைத் திடர்
செய்யவும், எழுந்து இயம் கல்லென எங்கும் - பரவி
இயங்கள் கல்லென்று ஒலிக்கவும், நக்க வேல் கை நரபதி நண்ணினான் -
விளங்கிய வேற்படையை ஏந்திய கையையுடைய நரபதி யென்னும் அரசன்
வந்து சேர்ந்தான் எ - று.
நகுதல்
- ஒளிவிடுதல். இச் செய்யுள் உயர்வு நவிற்சியணி. (18)
மீன வேலையிற் கந்துக மேற்கொடு
கூனல் வார்சிலை வஞ்சக் கொடுஞ்சமர்க்
கான வாழ்க்கை யரட்டக் கரும்படை
மான வேற்குறு மன்னவர் நண்ணினார். |
(இ
- ள்.) மீனவேலையில் கந்துகம் மேற்கொடு - மீன்களையுடைய
கடலையொத்த குதிரைமேற் கொண்டு, கூனல் வார்சிலை - வளைந்து நீண்ட
வில்லாற்புரியும், கொடும் வஞ்ச சமர் - கொடிய வஞ்சப்போரினையும், கான
வாழ்க்கை - காட்டில் வாபம் வாழ்க்கையையும் உடைய, அரட்டக் கரும்படை
- குறும்பராகிய கரிய படையுடன், மானவேல் குறுமன்னவர் நண்ணினார் -
வலிய வேற்படையையுடைய குறுநில மன்னர்கள் வந்து சேர்ந்தார்கள் எ - று.
மீன்
என்னுந் தமிழ்ச் சொல் மீனமென வடமொழியிற் றிரிந்தது. வேலை
போலும் கரும்படையெனக் கூட்டலுமாம். சிலையையும் என எண்ணுதலும்,
சமர்க்கு ஆன எனப் பிரித்துப் போருக் கமைந்த என்று கூறுதலும் ஆம்.
அரட்டர் - துட்டர்;
|