I


548திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



"அரட்ட ரைவரை யாசறுத் திட்டு"

என்பது தேவாரம்; அரட்டராகிய குறுமன்னவர் என இயைத்தலுமாம்; இதற்கு
அரட்டர் குறுநில மன்னர் என்னும் பொருட்டு. (19)

சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர்
மான வேல்வல மாளவர் சாளுவர்
தான மாநிரைச் சாவக ராதியாம்
ஏனை நாட்டுள மன்னரு மீண்டினார்.

     (இ - ள்.) சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர் - சீனரும்
சோனகரும் சிங்களரும் கொங்கணரும், மானவேல் வல மாளவர் சாளுவர்
- வலிய வேற் போரில் வல்ல மாளவரும் சாளுவரும், தானம் மா நிரைச்
சாவகர் ஆதியாம் - மத நீரினையுடைய யானைக் கூட்டத்தையுடைய
சாவகரும் முதலாகிய, ஏனை நாட்டு உள மன்னரும் ஈண்டினார் - மற்றை
நாட்டிலுள்ள அரசர்களும் வந்து சேர்ந்தார்கள் எ - று.

     மானம் - பெருமையுமாம். சாவகம - தெற்கே கடல் நடுவண்
உள்ளதொரு நாடு. (20)

நூலொ டுந்துவக் குண்டு நுடங்குமான்
றோலர் தூங்கு சுருக்குடைத் தானையர்
கோல முஞ்சியர் கிஞ்சுகக் கோலினர்
நாலு நூல்பயி னாவினர் நண்ணினார்.

     (இ - ள்.) நூலொடும் துவக்குண்டு நுடங்கும் மான்தோலர்
பூணூலுடன் கட்டுண்டு அசையும் மான்றோலையுடையவரும், தூங்கு
சுருக்குடைத் தானையர் - (முன்னே) தொஙகுகின்ற மடித்தலையுடைய
ஆடையினரும், கோல முஞ்சியர் - அழகிய முஞ்சிப் புல்லாலாகிய
அரைஞாணை யுடையவரும், சிஞ்சுகக் கோலினர் - முள் முருக்கங்
கோலினை யுடையவரும், நாலு நூல் பயில் நாவினர் நண்ணினார் - நான்கு
மறைகளையும் பயிலுகின்ற நாவினையுடையவரும் ஆகிய மாணவர்கள் வந்து
சேர்ந்தார்கள். எ - று.

     சுருக்கு - கொய்சகம். முஞ்சி - ஒருவகைப் புல். சிஞ்சுகம் - பலாசம்.
மாணவகராவார் பிரமசாரிகள்; இவர் ஆசாரியனிடத்திருந்து ஓதுதலும்
விரதங்காத்தலுமாகிய ஒழுக்கத்தினையுடையர். (21)

வட்ட நீர்க்கலக் கையினர் வார்ந்துதோள்
விட்ட குண்டலக் காதினர் வேட்டதீத்
தொட்ட கோலினர் வேள்வியிற் சுட்டநீ
றிட்ட நெற்றிய ரில்லொடு நண்ணினார்.

     (இ - ள்.) வட்டம் நீர்க்கலம் கையினர் - வட்டமாகிய கமண்டல
மேந்திய கையினரும், வார்ந்து தோள்விட்ட குண்டலக் காதினர் - நீண்டு
தோல்வரையும் தொங்கவிட்ட குண்டலத்தையுடைய செவியினரும், வேட்ட தீ
தொட்ட கோலினர் - வேள்வி செய்வதற்குக் கருவியாகிய தீக்கடை
கோலினரும், வேள்வியில் சுட்ட நீறு இட்ட நெற்றியர் - வேள்வியின்கண்