I


திருநாட்டுச் சிறப்பு55



     (இ - ள்.) கழிந்த தெங்கின் ஒண்பழம் பரீஇ - குலையினின்று
நீங்கிய தென்னையின் ஒள்ளிய காய்களைப் பரித்தலால், முள்பலாக்கனி
கீண்டு அழிந்த தேன் - முட்களையுடைய பலாப்பழங்கள் கிழிபட்டு ஒழுகிய
தேன்கள், உவர்க்கேணி பாய்ந்து - உப்புக்கேணியிற் பாய்ந்து, உவரை
அகற்றுவ - அவ்வுப்பைப் போக்குவன; தேன் வழிந்த - தேன் சிந்திய,
மடல் கேதகை மலர்நிழல் - இதழ்களையுடைய தாழம்பூவின் நிழலை, குருகு
என்று - கொக்கு என்று அஞ்சி, ஒழிந்த தாமரைப் போது - (அப்பறவை
இருந்து) நீங்கிய தாமரைமலரில், புக்கு - புகுந்து, கெண்டை ஒளிப்பன -
கெண்டை மீன்கள் மறைந்து கொள்வன எ - று.

     இச்செய்யுளின் பின்னிரண்டடிகளை "கேதகை நிழலைக் குருகென
மருவிக் கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்" என்னும் திருவிசைப்
பாவோடு
ஒத்துநோக்குக. பரீஇ - பரித்து, சுமந்து : எச்சத்திரிபு. கீண்டு :
கீழ்ந்து என்பதன் மரூஉ. பலா குறிஞ்சிக்கேயன்றி மருதத்திற்கு முரித்து.
தெங்கு, பலா, தாமரை, கெண்டை மருதத்திற் குரியன. உவர்க்கேணி,
கேதகை நெய்தற் குரியன. குருகு இரண்டிற்கு முரித்து. மருதத்திற்கும்
நெய்தலுக்கும் மயக்கங் கூறியவாறு.

"காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து"

என்னும் சிந்தாமணிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (40)

ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை
சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து
கூற வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
தூறு வாரெனச் சிரித்தலர் தூற்றுவ முல்லை.

     (இ - ள்.) கூன்கைதை - வளைந்த தாழைகள், ஆறுசூழ் கழிபுலால்
பொறாது - ஆறாகச் சூழ்ந்த உப்பங்கழியின் புலால் நாற்றத்தைப்
பொறுக்கலாற்றாது, அசைந்து - (உடல்) நடுங்கி, சோறு கால்வன -
(பூவினின்று மகரந்தாங்கிய) சோற்றைக் கக்க, ஆம்பல்வாய் திறப்பன -
ஆம்பல்கள் (அதனை உண்ணுங் குறிப்பின போன்று மலர்களாகிய) வாயைத்
திறப்பன; குவளை துணிந்து கூறுவார் என - குவளைகள் (ஒருவன்
தீயசெயலை) மணந்துணிந்து சொல்வார்போல, கங்ணகாட்ட - (மலர்களாகிய)
கண்ணாலறிவிக்க, முல்லை - முல்லைகள், கூடிச் சிரித்துத் தூறுவார் என -
(ஒருவன் குற்றத்தைத் தம்முட்) கூடி நகைத்துத் தூற்றுகின்றவரைப் போல,
அலர் தூற்றுவ - (மலர்தலாகிய) நகைத்தலைச் செய்து பழம்பூக்களைத்
தூற்றுதல் செய்யும் எ - று.

     சோறு - மகரந்தம், அடிசில். அலர்தூற்றுவ என்பதில் பழிச்
சொற்களைத் தூற்றுவன என்னும் குறிப்புமுளது. ஆம்பல் மலர்தலை
வாய்திறப்பன என்றும், குவளை நெகிழ்தலைக் கண்காட்டிட என்றுங்
கூறினார். கால்வன என்பது செயவெனெச்சப் பொருளில் வந்தது.
நெய்தலோடு மருதத்திற்கும் முல்லைக்கும் மயக்கங் கூறியவாறு. (41)

துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்
கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை
கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்
எள்ளு மாறவு மளப்பன விடைக்கிடை முத்தம்.