ஓடு
: எண்ணிடைச் சொல்; பிறவழியும் பிரிந்து சென்றியையும்
ஒண்மை - சிறப்பு. பதினெண் கணத்தவர் : தேவர், அசுரர், முனிவர்,
கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர்,
சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம், ஆகாய
வாசிகள், போக பூமியோர் என்னும் இவர்கள். (26)
அணைந்து கோயி
லடைந்தரிச் சேக்கைமேற்
குணங்க டந்தவன் கோமள வல்லியோ
டிணஙகி வைகு மிருக்கைகண் டேத்தினார்
வணங்கி னார்வணங் கும்முறை வாழ்த்தினார். |
(இ
- ள்.) அணைந்து கோயில் அடைந்து - வந்து திருக்கோயிலைச்
சேர்ந்து, அரிச் சேக்கை மேல் - சிங்காகனத்தின்மேல், குணம் கடந்தவன்
கோமளவல்லியோடு இணங்கி வைகம் இருக்கை கண்டு - குணங்களைக்
கடந்த சுந்தர பாண்டியர் இளங்கொடிபோலும் தடாதகைப் பிராட்டியாரோடும்
சேர வீற்றிருக்கும் இருப்பினைத் தரிசித்து, ஏத்தினார் வணங்கும் முறை
வணங்கினார் வாழ்த்தினார் - துதித்து வணங்கு முறையால் வணங்கி
வாழ்த்தினார்கள் எ - று.
குணம்
- மாயையின் காரியமாகிய முக்குணம். கோமளம் - இளமை
அழகு. ஏத்தினார், வணங்கினார் என்பன முற்றெச்சங்கள். (27)
விரைசெய்
தார்முடிச் சுந்தர மீனவன்
சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொன்முறை
வரிசை நல்கி யிருந்தனன் மன்னவன்
திரும கன்மணஞ் செய்திறஞ் செப்புவாம். |
(இ
- ள்.) விரைசெய் தார் முடிச் சுந்தர மீனவன் - மணம் பொருந்திய
மாலையை யணிந்த முடியினையுடைய சுந்தரபாண்டியன், கூரர்கள் மாதவர்
வேந்தர்க்கு - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அரசர்களுக்கும்,
தொன்முறை வரிசை நல்கி - தொன்று தொட்டுள்ள முறைப்படி வரிசை
அளித்து, இருந்தனன் - வீற்றிருந்தான்; மன்னவன் திருமகன் மணம்
செய்திறம் செப்புவாம் - (இனி) அப்பாண்டியன் திருமகனாகிய உக்கிரவழுதி
திருமணம் புரியும் தன்மையைக் கூறுவாம் எ - று.
குவ்வுருபும்
எண்ணும்மையும் விரிக்க. வரிசை - தகுதிக்கேற்ற சிறப்பு.
(28)
சோம சேகரன்
றோகை வனப்பெலாங்
கோம கன்கண் டுவப்பக் கொள்கைகண்
டேம மேனிய னூல்வழி யார்க்குமத்
தேமன் கோதை யுறுப்பிய றேற்றுவான். |
(இ
- ள்.) சோமசேகரன் தோகை வனப்பு எலாம் - சோம சேகரன்
புதல்வியின் அழகு முழுவதையும், கோமகள் கண்டு உவப்ப -
|