I


552திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



சுந்தரபாண்டியன் அறிந்து மகிழாநிற்க, அக் கொள்கை கண்டு - அத்
தன்மையினை யுணர்ந்து, ஏம மேனியன் - பொன்மேனியனாகிய குரு, நூல்
வழி - உறுப்பியல் நூலின்படியே, யார்க்கும் - யாவருக்கும், அத் தேமன்
கோதை - அந்தத் தேன்பொருந்திய மாலையை யணிந்த கூந்தலையுடைய
காந்திமதியின், உறுப்பு இயல் தேற்றுவான் - உறுப்புக்களின் இலக்கணத்தைத்
தெளிவிக்கின்றான் எ - று.

     சோமசேகரன் பெற்ற தோகை போல்வா ளென்க. உவப்ப வென்பதற்கு
உவக்குமாறென்றும், அக்கொள்கை யென்பதற்கு அதனை யுரைக்கவேண்டு
மென்னும் அக்குறிப் பென்றும் பொருளுரைத்தலுமாம். (29)

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
பெருகநீண் டறவுங் குறுகிடா வாகிப்*
     பிளந்திடாக் கடையவாய்த+ தழைந்து
கருவிவான் வண்டின் கணமெனக் கறுத்துக்
     கடைகுழன் றியன்மணங் கான்று
புரையறச் செறிந்து நெறித்துமெல் லென்று
     புந்திகண் கவரநெய்த் திருண்ட
மருமலர்க் குழலா டன்பதிக் கினிய
     மல்லல்வான் செல்வமுண் டாகும்.

     (இ - ள்.) பெருக நீண்டு அறவும் குறுகிடா வாகி - மிக நீளாமலும்
மிக்க குறுகாமலும், பிளந்திடாக் கடையவாய்த் தழைந்து - பிளவுபடாத
நுனியினை யுடையவாய்த் தழைவுற்று, கருவிவான் வண்டின் கணம் எனக்
கறுத்து - தொகுதியாகிய முகில்போன்றும் வண்டின் றிரள்போன்றும் கறுத்து,
கடை குழன்று - நுனி குழற்சியுற்று, இயல்மணம் கான்று - இயல்பாக மணம்
வீசி, புரை அறச் செறிந்து - குற்றமற நெருங்கி, நெறித்து - அறல்பட்டு,
மெல்லென்று - மெத்தென்று, புந்தி கண் கவர - (கண்டோர்) மனத்தையும்
கண்களையும் கொள்ளை கொள்ள, நெய்த்து இருண்ட - நெய்ப்புற்று
இருண்ட, மருமலர்க்குழலாள், பதிக்கு - நாயகனக்கு, இனிய - இனிமையாகிய,
வான் - சிறந்த, மல்லன் செல்வம் உண்டாகும் - மிக்க செல்வ முண்டாகும்
எ - று.

     பெருக - மிக. மிக நீளாமலுமென்க; நீண்டு என்னில் குறுகிடாவாகி
யென்பது பயனிலதாம். நெய்த்தல் - பசையுறல். தன் : சாரியை. மல்லல்,
செல்வம் என்பன ஒரு பொருளன. இனிய வளனும் சிறந்த செல்வமும்
என்னலுமாம், (30)

திண்மத வேழ மத்தகம் போலத்
     திரண்டுயர் சென்னியா ளவுடன்
உண்மகிழ் கணவ னாயுணீண் டகில
     வுலகர சுரியனா மெட்டாந்

     (பா - ம்.) * குறுகிடாதாகி. +கடையதாய் நெறிந்து. புள்மையதாகிய.
நெய்த்து.