தண்மதி போன்று மயிர்நரம் பகன்று
தசைந்துமூ விரலிடை யகன்ற
ஒண்மதி நுதறன் பதிக்குநற் றிருவோ
டுலப்பிலா ரோக்கிய முண்டாம். |
(இ
- ள்.) திண் மத வேழ மத்தகம் போல - திண்ணிய மதயானையின்
மத்தகம் போன்று, திரண்டு உயர் சென்னியானவள் - திரண்டு உயர்ந்த
தலையினை யுடையாளின், உள் மகிழ் கணவன் - மனமகிழும் நாயகன்,
ஆயுள் நீண்டு அகில உலகு அரசு உரியனாம் - வாழ்நாள் மிக்கு எல்லா
வுலகங்களையும் அரசாளுதற் குரியனாவான்; தண் - குளிர்ச்சி பொருந்திய,
எட்டாம் மதிபோன்று - எண்ணாட் பக்கத்து மதியைப் போன்று, மயிர் நரம்பு
அகன்று - மயிரும் நரம்பும் இல்லாமல், தசைந்து - தசைப்பற்றுடையதாய்,
மூவிரல் இடை அகன்ற - மூன்று விரல் அளவு இடையே விரிந்த, ஒள்மதி
நுதல் தன்பதிக்கு - ஒள்ளிய மதிக்கின்ற நெற்றியை யுடையாளின் நாயகனுக்கு,
நல் திருவோடு உலப்பு இல் ஆரோக்கியம் உண்டாம். - நல்ல செல்வமும்
கெடுதலில்லாத உடல் நலமும் உண்டாகும் எ - று.
சென்னியாள்
யாவள் அவளுடைய என விரிக்க. மதிக்கத்தக்க ஒள்ளிய
நெற்றி. தன் இரண்டும் சாரியை. (31)
கண்கடை சிவந்தான்
பாலென வௌத்து
நடுவிழி கழியவுங் கரிதாய்
எண்கவி னடைந்து கோமளமாகி
யிமைகரு மயிர்த்தெனி னினிய*
ஒண்கரும் புருவங் குனிசிலை யொத்த
தத்தமி லொத்திரு தொளையும்
பண்கொள வுருண்டு துண்டமெட் போது
பதுமமேற் பூத்தது போலும். |
(இ
- ள்.) கண் கடை சிவந்த - கண்ணானது கடையிற் சிவந்து,
ஆன்பாலென வெளுத்து - பசுவின் பால்போல வெளுத்து, நடுவிழி கழியவும்
கரிதாய் - விரியின் நடு மிகவும் கருமையாயிருக்கப்பெற்று, எண் கவின்
அடைந்து - மதிக்கத்தக்க அழகுபெற்று, கோமளம் ஆகி -(நோக்குவார்க்குப்)
பொலிவினை யுடையதாய், அமை கரு மயிர்த்து எனின் - இமையானது
கருமயிரினையுடையவாக இருக்கப் பெற்றால், இனியது - (அது)
இன்பந்தருவதாம்; ஒண் கரும் புருவம் - ஒள்ளிய கரிய புருவங்கள்,
குனிசிலை ஒத்த - வளைந்த வில்லைப்போன்றன (ஆயின் நல்லனவாம்);
துண்டம் - நாசியானது, இரு தொளையும் தத்தமில் ஒத்து - இரண்டு
தொளையும் வேறுபாடின்றித் தம்மில்ஒத்து, பண் கொள உருண்டு - அழகு
பெற உருட்சியுடையத்தாகி, எள் போது பதும மேல் பூத்ததுபோலும் -
எள்ளின் மலர் தாமரை மலரின் மேல் மலர்ந்தது போலும் (முகத்தில்
விளங்குமான் நன்மையாம் எ - று.
(பா
- ம்.) * இனியது.
|