இச்செய்யிளின் முதலடியை,
"சேலனைய சில்லரிய
கடைசிவந்து கருமணியம்
பாலகத்துப் பதித்தன்ன படியவாய்" |
என்னும் சிந்தாமணிச்
செய்யுளோடும்,
"பாலிற் கிடந்த
நீலம் போன்று" |
என்னும் திருவிடை
மருதூர் மும்மணிக்கோவை யடியோடும் ஒப்பிடுக.
கண்ணென்னும் சினை ஈண்டு முதலாகக் கடை நடுவிழி இமை என்பன
அதற்குச் சினையாகியும், துண்டமென்னும் சினை ஈண்டு முதலாகத் தொளை
அதற்குச் சினையாகியும் வந்தமையின், சிவந்து முதலிய சினை வினைகள்
முதலொடு பொருந்தின வெனக் கொள்க. சில சொற்கள்
வருவித்துரைக்கப்பட்டன. இனியது என்பதில் துவ் வீறு தொக்கது. (32)
வள்ளைபோல்
வார்ந்து தாழ்ந்திரு செவியு
மடற்சுழி நல்லவாய் முன்னர்த்
தள்ளிய காது மனோகர மாகுந்
தன்மையா னன்மையே தழைக்கும்
ஒள்ளிய கபோலம் வட்டமாய்த் தசைந்திட
டுயர்ந்துகண் ணாடிமண் டிலம்போ
றெள்ளிய வூற்ற மினியது நன்றென்
றோதினான் றிரைகடற் செல்வன். |
(இ
- ள்.) இருசெவியும் - இரண்டு செவிகளும், வள்ளைபோல்
வார்ந்து - வள்ளைத் தண்டுபோல வார்தலையுடையனவாய், தாழ்ந்து மடல்
சுழி நல்லவாய் - தாழ்ந்து மடலின் சுழிகள் நல்லனவாய், முன்னர்த் தள்ளிய
காது - முன்னே தள்ளியன (ஆயின் அச்) செவிகள், மனோகரமாகும்
தன்மையால் நன்மையே தழைக்கும் - அழகியனவாந் தன்மையால் நன்மையே
தழையச் செய்யும்; ஒள்ளிய கபோலம் - ஒளி பொருந்திய கபோலமானது,
வட்டமாய் - வட்டவடிவினதாய், தசைந்திட்டு உயர்ந்து -
தசைப்பற்றுடையதாய் உயர்ந்து, கண்ணாடி மண்டிலம் போல் - கண்ணாடி
வட்டம் போல, தெள்ளிய ஊற்றம் இனியது நன்று என்று - தெளிவுடைய
பரிசம் இனியதாயின் நன்மை என்று, திரை கடல் செல்வன் ஓதினான் -
அலைதலையுடைய கடலின் செல்வனாகிய வருணன் கூறினான் எ - று.
தள்ளியவாயின்
அக் காது என விரிக்க. மனொகரம் - மனத்திற்கு
மகிழ்ச்சி விளைக்கும் அழகு முதலியன. தழைக்கும் - தழைவிக்கும் :
பிறவினை; உடையார்க்கு நன்மை பெருகுமென்றலுமாம். ஊற்றம் இனியது -
சருச்சரையில்லாத இனிய பரிசமுடையது. வருணன் உறுப்பியல் நூலுட்
கூறினானென்க. (33)
கொவ்வைவா
யதரந் திரண்டிரு புடையுங்
குவித்துசேந் திரேகைநேர் கிடந்தால்
அவ்வணி யிழைதன் னன்பனுக் கென்று
நண்புரு வாகுமெண் ணான்கு |
|