I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்557



முறையே சிறுத்திருக்குமாயின்; செல்வமோடு இன்பம் தங்கும் - பொருளோடு
இன்பமும் நிலைபெறும்; வள் உகிர் சேந்து உருண்டு - கூரிய நகங்கள்
சிவந்து உருண்டு, கண் உள்ளம் கவர்வதாய் - (கண்டோரின்) கண்ணையும்
மனத்தையும் கொள்ளை கொள்வனவாய், சரசரப்பு அகன்றால் - சருச்சரை
ஒழிந்துளவாயின், அவை நல்ல - அவை நல்லனவாம்; அகங்கை -
அகங்கைகள், மெல்லெனச் சேந்து - மென்மையுடையவாய்ச் சிவந்து,
இடைவெளி அகன்று இடை உயர்ந்து - இடை வெளியின்றி நடுவி்ல் உயர்ந்து,
மங்கலமாய் - பொலிவையுடையனவாய், சில வரைகளின் இலக்கணவரை உள
- சிலவாகிய இரேகைகளில் உத்தம இலக்கணம் வாய்ந்த இரேகைகள்
உள்ளன (ஆயின்), நல்ல - நன்மையுடையனவாம் எ - று.

     கவர்ந்து : பன்மையிலொருமை வந்தது. அங்கு, மாது, ஓ என்பன
அசைகள். ‘செங்கையங் குலிநீண் டுருண்டுகண் மரீஇ நேர் சிறுத்திடில்’ எனப்
பாடங்கொண்டு, ‘சிவந்த கைவிரல்கள் நீண்டு திரண்டு கணுக்கள் பொருந்தி
முறையே சிறுத்துளவாயின்’ எனப் பொருளரைப்பர் மதுரை இராமசுவாமிப்
பிள்ளை. (37)

முத்தணி தனங்கள் கடினமாய்த் தசைந்து
     வட்டமாய் முகிழ்த்திரு கடநேர்
ஒத்திறு மாந்தீர்க் கிடையற நெருங்கி
     யுள்ளன மெலிந்தமர்ந் துரோம
பத்திபெற் றயலே மயிர்நரம் பகன்ற
     பண்டியா ளுண்டிவேட் டாங்கே
துய்த்திடு நாபி வலஞ்சுழித் தாழ்ந்தாற்
     றொலைவிலாத் திருவளம் பெருகும்.

     (இ - ள்.) முத்து அணி தனங்கள் - முதுமாலை அணிந்த
கொங்கைகள், கடினமாய் - இறுகியனவாய், தசைந்து - தசைப்பற்றுடையன
வாய், வட்டமாய் முகிழ்த்து - வட்டமாக அரும்பி, இருகடம் நேர் ஒத்து -
இரண்டு குடங்களைப்போன்று, இறுமாந்து - இறுமாத்தலுற்று, ஈர்க்கு இடை
அறநெருஙுகி உள்ளன - ஈர்க்கானது இடையில் புகாத வண்ணம் நெருங்கி
யிருப்பன (ஆயின் நன்மை யுடையனவாம்); மெலிந்து அமாந்து -
குழைவுடையடதாய்ப் பொருந்தி, உரோம பத்தி பெற்று - (நடுவில்) மயிர்
வரிசை பெற்று, அயலே மயிர் நரம்பு அகன்ற பண்டியாள் - பக்கத்தே
மயிரும் நரம்பும் இல்லாத வயிறுடையவள், வேட்டாங்கே உண்டி துய்த்திடும்
- விரும்பியபடியே சிறந்த உணவினை நுகர்வாள்; நாபி வலம் சுழித்து
ஆழ்ந்தால் - நாபியானது வலமாகச் சுழித்து ஆழமுடையதாயின், தொலைவு
இலாத் திருவளம் பெருகும் - கெடுதலில்லாத செல்வ வளம் பெருகும் எ-று.

     நேர் ஒத்து - நன்கொத்து, ஈர்க்கு இடையற நெருங்கி யென்ற கருத்து,

"ஈர்க்கிடை போகா விளமுலை"

எனத் திருவாசகத்திற் போந்துளது. நாபி வலஞ் சுழித்தல்,