"அங்கைபோல்
வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ்" |
என்று
சிந்தாமணியிற் கூறப்பட்டுள்ளது. உள்ளன வென்பதன்பின் சில
சொற்கள் வருவிக்கப்பட்டன. (38)
இடைமயிர் நரம்பற் றிருபதோ டொருநான்
கெழில்விர லளவொடு வட்ட
வடிவதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப
மத்தகம் யாமையின் புறம்போற்
படிவநே ரொத்த னன்றிரு குறங்கும்
படுமயி ரென்பகன் றியானைத்
தடவுடைக் கையுங் கரபமுங் கதலித்
தண்டுமொத் திருக்கினன் றென்ப. |
(இ
- ள்.) இடை - மருங்குலானது, மயிர் நரம்பு அற்று - மயிரும்
நரம்பும் இன்றி, இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவொடு -
இருபத்து நான்கு அழகிய விரலினளவினோடு, வட்ட வடிவதாய்ச் சிறுகி
மெலிவது - வட்ட வடிவினதாய்ச் சிறுத்துத் தளர்வது (ஆயின் நன்மையாம்);
நிரம்பம் - அல்குலானது, மத்தகம் யாமையின் புறம் போல் - யானையின்
மத்தகமும் யாமையின் முதுகும் போல, படிவம் நேர் ஒத்தல் நன்று - வடிவு
சமமாயிருத்தல் நன்மையாம்; இருகுறங்கும் - இரண்டு தொடையும், படுமயிர்
என்பு அகன்று - உண்டாகும் மயரும் எலும்பும் நீங்கி, யானை தட உடைக்
கையும் - யானையினது பெருமை பொருந்திய துதிக்கையையும், கரபமும் -
கையினடியையும்; கதலித்தண்டும் - வாழைத் தண்டையும், ஒத்திருக்கில் நன்று
என்ப - ஒத்திருக்குமாயின் நன்மை என்று கூறுவர் எ - று.
நிதம்பம்
- இடையின் கீழ்ப்பக்கம்; பின்புறமாகிய சகனமென்றும்
உரைப்பார். தட - பெருமை;
"தடவுங் கயவு
நளியும் பெருமை" |
என்பது தொல்காப்பியம்.
(39)
அங்கமுண் மறைந்து வட்டமாய்த் தசைவ
தணிமுழந் தாண்மயிர் நரம்பு
தங்கிடா தடைவே யுருட்சியாய்ச் சிறுத்துச்
சமவடி வாயழ கடைந்த
சங்கையாஞ் சிரையென் பறத்தசைந் தியாமை
முதுகெனத் திரண்டுயர்ந் தழகு
மங்கலம் பொலிந்த புறவடி மடந்தை
மன்னவன் பன்னியா மன்னோ. |
(இ
- ள்.) அணி முழந்தாள் - அழகிய முழங்கால், அங்கம் உள்
மறைந்து - எலும்பு வெளித்தோன்றாமல் உள்ளே மறைந்து, வட்டமாய் -
|