(இ
- ள்.) துள்ளு சேல் விழி நுளைச்சியர் - துள்ளுகின்ற கெண்டை
மீன்போலுங கண்களையுடைய நெய்தனிலப் பெண்களால், சுற வொடும்
அருந்த - சுறா மீனோடும் உண்ணுதற் பொருட்டு, கள்ளு கொழும் சுவைக்
கன்னல் - கள்ளையும் கொழுவிய இனிய கரும்பையும், மாறவும் - வாங்குதற்
பொருட்டும், கூனலங்காய் தினை கிழங்கு தேன் - புளியங்காய் தினை
கிழங்கு தேன் இவைகளை, மாறவும் - வாங்குதற் பொருட்டும், அவரை
கொள்ளு எள்ளு மாறவும் - அவரை கொள் எள் இவைகளை வாங்குதற்
பொருட்டும், இடைக்கு இடை முத்தம் அளப்பன - அளவுக்கு அளவு
முத்துக்கள் அளக்கப் பெறுவன எ - று.
கள்,
கன்னல் மருதத்திற்கும்; கூனலங்காய், தினை, கிழங்கு, தேன்
குறிஞ்சிக்கும்; அவரை, எள், கொள் முல்லைக்கு முரியன. கள்ளு, கொள்ளு,
எள்ளு என்பவற்றில் உகரமும், கூனலங்காய் என்பதில் அம்மும் சாரியை.
மாறல் - ஒரு பண்டங் கொடுத்து மற்றொரு பண்டம் வாங்கல்; பண்ட
மாற்று என்னும் வழக்குங் காண்க; ஈண்டு வாங்க என்னுந் துணையாய்
நின்றது. நெய்தலோடு மருதத்தற்கும் முலலைக்கும், குறிஞ்சிக்கும் மயக்கங்
கூறியவாறு. சொல்லானும் மயக்கங் காட்டுவார் போன்று இச்செய்யுளில்
சொற்களை முறை பிறழ வைத்திருப்பதும் ஓர் வியப்பு. (42)
அவமி கும்புலப் பகைகடந் துயிர்க்கெலா மன்பாம்
நவமி குங்குடை நிழற்றிமெய்ச் செய்யகோ னடாத்திச்
சிவமி கும்பர ஞானமெய்த் திருவொடும் பொலிந்து
தவமி ருந்தர சாள்வது தண்டமிழ்ப் பொதியம். |
(இ
- ள்.) அவம் மிகும் - கேடு மிகுந்த, புலப்பகை கடந்து -
புலனாகிய பகையை வென்று, உயிர்க்கு எலாம் - உயிர்கள் அனைத்திற்கும்,
அன்பு ஆம் நவம் மிகும் குடை நிழற்றி - அருளாகிய புதுமை மிக்க
குடையால் நிழலைச் செய்து, மெய்ச் செய்ய கோல் நடாத்தி -
வாய்மையாகிய செங்கோலை நடத்தி, சிவம் மிகும் - சிவப்பேறு மிகுதற்குக்
காரணமாயுள்ள, பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து - சிவஞானமாகிய
அழியாச் செல்வத்துடன் விளங்கி, தவம் இருந்து அரசு ஆள்வது -
தவமானது வீற்றிருந்து ஆட்சி புரிவதற் கிடமாயுள்ளது, தண் தமிழ்ப்
பொதியம் - குளிர்ந்த செந்தமிழை யுடைய பொதியின் மலை எ - று.
புலம்
- ஊறு முதலியன; மெய் முதலிய பொறிகளுமாம். தவத்திற்
கேற்ப அன்பு என்பதற்கு அருளெனப் பொருள் கூறப்பட்டது. சிவம் -
மங்கலமுமாம். புலனடக்கல், அருள், வாய்மை, ஞானம் என்பன தவத்திற்குச்
சிறந்தன வாதல் குறிப்பிட்டவாறு. தவராச யோகிகளா யுள்ளார்கட்கு
இருப்பிடமாதல் பற்றித், தவமே அரசாளுதற்கிடனாயுள்ளது என்றார்.
தமிழை வளர்த்த ஆசிரியர் அகத்தியனார்க்கு என்றும் உறைவிடமாகலின்
தண்டமிழ்ப் பொதியம் என்றார். (43)
வான யாறுதோய்ந் துயரிய மலயமே முக்கண்
ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய்
யானை யீருரி யம்மழை யசும்பதன் புண்ணீர்
கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன் றன்றே. |
|