I


560திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



தண்ணறா முளரி மல்லிகை
     நறுந்தண் சண்பகம் போல்வன வாகும்
பண்ணவாங் கிளவி குயில்கிளி
     யாழிற் படின்வரும் பாக்கிய மென்னா.

     (இ - ள்.) ஆகம் - உடம்பு, வண்ணம் மாந்தளிர் போல் - செந்
நிறமுடைய மாந்தளிர் போலவும், எரி பொன் போல் சிவந்து - விளங்கும்
பொன் போலவும் செந்நிறம் வாய்ந்து, வைகலும் வெயர்வை அற்று -
எஞ்ஞான்றும் வெயர் வரும்பாமல், உண்ணமாய் இருக்கில் - வெம்மையாய்
இருக்குமாயின், செல்வம் உண்டாகும் - செல்வம் உள தாகும்; ஒள்மணம் -
(அவ்வுடலின்) மிக்க மணமானவை, பாடலம் - பாதிரி மலரும், குவளை -
நீலோற்பல மலரும், தண் அறா முளரி - தட்பம் நீங்காத தாமரை மலரும்,
மல்லிகை - மல்லிகை மலரும், நறுந்தண் சண்பகம் - இனிய குளிர்ந்த
சண்பக மலரும் ஆகிய இவற்றின் மணஙகளை, போல்வன ஆகும் - ஒத்தன
வாதல் வேண்டும்; பண் அவாம் கிளவி - இசையும் விரும்புகின்ற மொழி,
குயில் கிளி யாழின் படின் - குயிலும் கிளியும் யாழுமாகிய இவற்றின் ஓசை
போல இருக்கின், பாக்கியம் வரும் என்னா - பாக்கியம் வரும் என்று கூறி
எ - று.

     உண்ணம், உஷ்ணமென்பதன் சிதைவு. பாடலம் முதலியன அவற்றது
மலரின் மணத்திற்கும், குயில் முதலியன அவற்றது மலரின் மணத்திற்கும்,
குயில் முதலியன அவற்றின் ஓசைக்கும் ஆயின. அவாவுமென்பது
விகாரமாயிற்று. படின் - பொருந்தின், மேலைச் செய்யுளில் ‘துகளிலா
வழகுமே யன்றி’ என்றும், இச் செய்யுளில் ‘உண்ணமுஞ் சிவப்பு முள்ளதாய்
வேர்வை யொழிந்ததேற் செல்வமா மாகம், வண்ணமார்பொன்போ னன்னிறம்
வாய்தல் வண்மணம்’ என்றும், ‘சம்பகம் போல்வது நன்றாம்’ என்றும் பாடங்
கொண்டனர் இராமசுவாமிப் பிள்ளை. (42)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
கருங்குழற் கற்றை தொட்டுச் செம்மலர்க் காலி னெல்லை
மருங்குனல் கூர்ந்த கன்னி வடிவெலாம் வாக்கின் செல்வன்
ஒருங்குநூ லுணர்வாற் றெள்ளி யிம்பரின் றும்பர் தேத்தும்
இரங்குமிக் குயிலன் னாண்மெற் யிலக்கண மரிய தென்றான்.

     (இ - ள்.) நல்கூர்ந்த மருங்குல் கன்னி - சிறுகிய இடையினை யுடைய
காந்திமதியின், கற்றைக் கருங்குழல் தொட்டு - திரண்ட கரிய கூந்தல் முதல்,
செம்மலர்க்காலின் எல்லை வடிவு எல்லாம் - செந்தாமரை மலர் போன்ற
காலின் வரையுள்ள உறுப்புகளனைத்தையும், வாக்கின் செல்வன் - மொழிச்
செல்வனாகிய வியாழ குரவன், நூல் உணர்வால் ஒருங்கு தெள்ளி - உறுப்பு
நூலின் உணர்ச்சியால் ஒரு சேர ஆராய்ந்து, இரங்கும் இக்குயில் அன்னாள்
மெய் இலக்கணம் - கூவுகின்ற குயில் போன்ற இக் காந்திமதியின்
உறுப்பிலக்கணமும், அம்பர் இன்று - இவ்வுலகத்தில் இல்லை; உம்பர்
தேத்தும் அரியது என்றான் - விண்ணுலகத்தும் இல்லை என்று கூறினான்
எ - று

     வாக்கின செல்வன் - சொல்லாகிய செல்வத்தையுடையவன்;

"யார்கொலிச் சொல்லின் செல்வன்"