என்பது இராமாயணம்.
உம்பர் தேத்தும் என்பதனை உம்பராகிய தேத்து
மென்றாவது, உம்பரது தேத்து மென்றாவது விரித்துரைத்துக் கொள்க; தேம் -
இடம்; தேத்துமென்னும் உம்மை எச்சமும் சிறப்புமாம். இரங்கல் - ஒலித்தல்;
கூவுதல். (43)
அங்கது கேட்டோர்
யாரு மகங்களி துளும்ப விப்பாற்
கொங்கலர் நறுந்தார்க் குஞ்சி யுக்கிர வழுதி* போந்து
மங்கல வரிசை மாண மத்தமான்+ சுமந்த வையைச்
சங்கெறி துறைநீ ராடித் தகுங்கடி வனப்புக் கொள்வான். |
(இ
- ள்.) அங்கு அது கேட்டோர் யாரும் அகம் களி துளும்ப -
அங்கு அதனைக் கேட்ட அனைவரும் மனம் மகிழ் சிறந்திருக்க, இப்பால் -
பின்பு, கொங்கு அலர் நறுந்தார்க் குஞ்சி உக்கிர வழுதி போந்து -
மகரந்தத்துடன் மலர்ந்த நறுமணமுடைய மலர் மாலையை அணிந்த
சிகையினையுடைய உக்கிர வழுதி (அவணின்றும்) எழுந்து, மங்கல வரிசை
மாண -அட்ட மங்கல வரிசைகளும் சிறக்க. மத்த மான் சுமந்த - மதச்
செருக்குடைய யானையால் சுமந்து வரப் பெற்ற, வையை - வையை யாற்றின்,
சங்கு எறிதுறை நீர் ஆடி - சங்குகளை வீசும், துறையின் நீரில் ஆடி, தகும்
கடி வனப்புக் கொள்வான் - சிறந்த திருமணக்கோலம் கொள்ளத்
தொடங்கினான் எ - று.
களி
துளும்ப வென்னும் சினைவினை முதல் மேல் நின்றது. மத்தம் -
மயக்கம்; மதக்களி. சுமந்த நீரி லென்க. (44)
கட்டவிழ்
கண்ணி வேய்ந்து மான்மதக் கலவைச் சாந்தம்
மட்டனஞ் செய்து முத்தான் மாண்கலன் முழுமுந் தாங்கி
விட்டவிர் கலைவான் றிங்கள் வெண்கதிர்ச் செல்வன் போல்வந்
திட்டபூந் தவிசின் மேற்கொண் டிருந்தனன் சங்க மேங்க. |
(இ
- ள்.) கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து - முறுக்கு அவிழ்ந்த மலர்
மாலை சூடி, மான்மதக் கலவைச் சாந்தம் மட்டனம் செய்து - மிருக மதங்
கலந்த கலவையாகிய சந்தனத்தை அப்பி, முத்தால் மாண்கலன் முழுதும்
தாங்கி - முத்துக்களால் மாட்சிமைப்பட்ட அணிகளனைத்தையும் அணிந்து,
விட்டு அவிர் கலைவான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து -
விட்டு (விட்டு) விளங்கும் கலையினையுடைய சந்திரன் போல வந்து, இட்ட
பூந்தவிசின் - கல்யான மண்டபத்தில் இட்ட அழகிய ஆதனத்தின் மேல்,
சங்கம் ஏங்க மேற் கொண்டு இருந்தனன் - சங்கங்கள் ஒலிக்க ஏறி
யிருந்தான் எ - று.
கண்ணி
- முடியிற் சூடுமாலை. மட்டனஞ் செய்து - மட்டித்து; பூசி.
முத்தானியன்ற கலன்களை முழுதுந் தாங்கியிருத்தலின் திங்கட் செல்வன்போ
லென்றார்; தன் குல முதல்வனென்பது தோன்றக் கூறினார். (45)
(பா
- ம்.) * உக்கிர குமரன். +மானமத்தமான்.
|