அந்நிலை மணநீ ராட்டி யருங்கலப் போர்வை போர்த்த
கன்னியைகி கொணர்ந்து நம்பி வலவயிற் கவின வைத்தார்
பன்னியோ டெழுந்து சோம சேகரன் பரனும் பங்கின்
மன்னிய வுமையு மாக மதித்துநீர்ச் சிரகந் தாங்கி. |
(இ
- ள்.) அந்நிலை - அப்பொழுது மணநீர் ஆட்டி - மணம்
பொருந்திய நீரில் மூழ்குவித்து, அருங்கலப் போர்வை போர்த்த கன்னியைக்
கொணர்ந்து - அரிய அணிகலனாகிய போர்வையில் போர்க்கப்பட்ட
காந்திமதியைக் கொண்டு வந்து, நம்பி வலவயின் கவின வைத்தார் .
உக்கிரகுமாரனது வலப்பக்கத்தில் அழகு பெற வைத்தனர்; சோம சேகரன்
பன்னியோடு எழுந்து - சோம சேகரனானவன் தன் மனைவியோடு மெழுந்து,
பரனும் பங்கில் மன்னிய உமையுமாக மதத்து - (அம் மண மக்களைச்)
சிவபிரானும் அவன் பாகத்தில் நிலைபெற்ற உமைப் பிராட்டியுமாகக் கருதி,
நீர்ச் சிரகம் தாங்கி - நீர் நிறைத் கரகத்தைக் கையில் ஏந்தி எ - று.
மணநீர்
- பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத்திருவகை
ஓமாலிகையினும் ஊறிய நன்னீர்; மன்றலுக் குரிய நீராட்டுச் செய்து என்றுமாம். சிவனும்
உமையுமாக மதித்துப் பூசித்தல் மரபு. சிகரம் - கமண்டலம். (46)
மங்கல நீரா னம்பி மலரடி விளக்கி வாசக்
கொங்கலர் மாலை சூட்டிக் குளிர்மது பருக்க மூட்டி
நங்கைதன் கையைப் பற்றி நம்பிதன் கையி லேற்றிப்
புங்கவ ரறிய நன்னீர் மந்திரம் புகன்று பெய்வான். |
(இ
- ள்.) மங்கல நீரால் நம்பி மலர் அடி விளக்கி - நலன் நிறைந்த
அந்நீரினால் உக்கிர வழுதியின் மலர் போன்ற திருவடிகளை விளக்கி, வாசக்
கொங்கு அலர்மாலை சூட்டி - மணம் பொருந்திய மகரந்தத்தொடு மலர்ந்த
மலர் மாலையை அணிவித்து, குளிர் மது பருக்கம் ஊட்டி - ஏளிர்ந்த மது
பருக்கத்தினை உண்பித்து, நங்கை தன் கையைப் பற்றி - பெண்ணின்
கையைப் பிடித்து, நம்பி தன் கையில் ஏற்றி - மண மகன் கையில் வைத்து,
புங்கவர் அறிய - தேவர்கள் அறிய, மந்திரம் புகன்று நல் நீர் பெய்வான் -
மந்திரங் கூறி நல்ல நீரினை வார்ப்பவன் எ - று.
மதுபருக்கம்
- பாலும் பழமும். நம்பி - ஆடவரிற் சிறந்தோன்.
நங்கை - பெண்டிரிற் சிறந்தவள். நீர் பெய்பவனென்க. தன் இரண்டும்
சாரியை. (47)
இரவிதன்
மருமான் சோம சேகர னென்பேன்* றிங்கள்
மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன்
உரவுநீர் ஞாலந் தாங்கு முக்கிர வருமற் கின்றென்
குரவலர்க் கோதை மாதைக் கொடுத்தன னெனநீர் வார்த்தான். |
(பா
- ம்.) * என்பேர்.
|