I


உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்563



     (இ - ள்.) இரவி தன் மருமாள் சோம சேகரன் என்பேன் - சூரியன்
மரபினனாகிய சோம சேகரனென்னும் பெயரையுடைய யான், திங்கள்
மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன் - சந்திர குலத்தை
விளக்கும்படி வந்தருளிய சுந்தர பாண்டியரின் திருப்புதல்வனாகிய, உரவு நீர்
ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு - கடல் சூழ்ந்த உலகத்தைப் பாதுகாக்கும்
உக்கிரவன்மனுக்கு, என் குரவு அலர் கோதை மாதை - என் புதல்வியாகிய
குராமலரை யணிந்த கூந்தலை டய காந்திமதியை, இன்று - இப்பொழுது,
கொடுத்தனன் என நீர் வார்த்தான் - கொடுத்தே னென்று தாரை வார்த்தான்
எ - று.

     என்பேன் - என்று பெயர் கூறப்படுவேன் : வினைப்பெயர்; என் பேர்
என்னும் பாடம் சிறபின்றாதல் காண்க. உரவு நீர் - வலிய நீர்; கடல்.
மைந்தனாகிய உக்கிரவருமற் கென்க. தன் ; சாரியை. (48)

பமைந்துறு மடங்கற் றிண்கான் மணிவட வயிர வூசல்
ஐந்துடன் பதஞ்செய் பஞ்சி யணையினோ டன்னத் தூவிப்
பைந்துகி லணையீ ரைந்து பவளவாய்ப் பசும்பொன் மேனி
இந்திர மணிக்கட் பாவை விளக்குநான் கிரட்டி யென்ப.

     (இ - ள்.) மைந்து உறு மடங்கல் திண் கால் - வலிமை மிக்க
சிங்கத்தின் திண்ணிய கால்போன்ற காலுள்ள, மணிவட வயிர ஊசல்
ஐந்துடன் - முத்துவடம் பூட்டிய வயிரத்தலாகிய ஊசல் ஐந்தும், பதம் செய்
பஞ்சி யணையினோடு - பதஞ் செய்த பஞ்சு பெய்த அணை (பத்தும்),
அன்னத்தின் தூவி பைந்துகில் அணை ஈரைந்தும் - அன்னத்தின் தூவி
பெய்த மெல்லிய ஆடையாலாமைந்த அணை பத்தும், பவளவாய் -
பவளத்தாலாகிய வாயும், பசும் பொன்மேனி - பசிய பொன்னாலாகிய உடலும்,
இந்திரமணிக்கண் - இந்திர நீலக்கல்லாலாகிய கண்களும் உடைய, பாவை
விளக்கு நான்கு இரட்டி - பாவை விளக்கு எட்டும் எ - று.

     ஊசல், இக்காலத்து ஊஞ்சலென வழங்கும். பஞ்சி - பஞ்சு. தூவி -
அன்னத்தின் சிறையடியிலுள்ள மெல்லிய மயிர். அணைதற்குரியதாகலின்
அணையெனப் பெயரெய்திற்று; இதனை மெத்தை யென்பர். பவள
முதலியவற்றால் வாய் முதலிய செய்யப்பட்ட பாவை. பாவையானது
விளக்கினை யேந்தி நிற்குமாறு அமைத்த படிவம் பாவைவிளக்கெனப்படும்.
ஊசல் முதலாக எண்ணப்படுவன பின் ‘விளைவொடு’ என்னுஞ் செய்யுளில்,
வழங்கினான் என்பது கொண்டு முடியும். என்ப : அசைநிலை;
வருஞ்செய்யுளிலும் அது. (49)

அட்டில்வா யடுக்குஞ் செம்பொற் கலங்கணூ றம்பொன் வாக்கி
இட்டிழை மணிக்க ளாஞ்சி யேழுபொற் கவரி யெட்டு
விட்டொளிர் பசும்பொற் கிண்ணப் பந்திசூழ் விளங்க நாப்பண்
நட்டபொற் காலி னோடு நகைமணிக் கலநூ றென்ப.

     (இ - ள்.) அட்டில் வாய் அடுக்கும் செம்பொன் கலங்கள் நூறு -
அடுக்களையில் அடுக்கப்பெறும் சிவந்த பொன்னாலாகிய பாத்திரங்கள்
நூறும், அம்பொன் வாக்கி - அழகிய பொன்னால் வார்த்து, அணி இட்டு
இழை களாஞ்சி ஏழு - மணிகளைப் பதித்து இழைத்த படிக்கம் ஏழும்,