பொன் கவரி எட்டு
பொன்னாலாகிய காம்பினையுடைய சாமரை எட்டும்,
விட்டு ஒளிர் பசும் பொன் கிண்ணப் பந்தி சூழ் விளங்க - ஒளி விட்டு
விளங்கும் பசும் பொன்னாலாகிய கிண்ண வரிசை சூழ்ந்து விளங்க, நாப்பண்
நட்ட பொன் காலினோடு - நடுவே நட்ட பொன்னாலாகிய காலுடன் கூடிய,
நகை மணிக்கலம் நூறு - ஒளி பொருந்திய மாணிக்கப் பாத்திரங்கள் நூறும்
எ - று.
வாக்கி
- கருக்கட்டி வார்த்து. சூழ் விளங்க நட்ட காலுடன் கூடிய
கலம் என்க. (50)
பெருவிலை யாரப் பேழை யாயிரம் பொற்ற நுண்டூ
சருவிலைப் பட்டு வெவ்வே றமைத்தன பேழை முந்நூ
றுருவமு தெழுதிச் செய்த வோவியப் பாவை யன்னார்
திருமணிக் கலனோ டேவற் சேடிய ரெழுநூற் றைவர். |
(இ
- ள்.) பெருவிலை ஆரப் பேழை - மிக்க விலையுள்ள முத்து
மாலை வைத்திருக்கும் பெட்டி (முந்நூறும்), ஆயிரம் பெற்ற நுண் தூசு -
ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்டுகிலும், அருவிலைப்பட்டு -
மதித்தற்கரிய விலையுள்ள பட்டும் ஆகிய இவைகளை, வெவ்வேறு
அமைத்தன பேழை முந்நூறு - வேறு வேறாக வைக்கப் பெற்ற பெட்டி
முந்நூறும், திருமணிக் கலனோடு - சிறந்த மாணிக்க அணிகளோடு, அமுது
உருவு எழுதிச் செய்த ஓவியப் பாவை அன்னார் - அமிழ்தத்தில்
(கோலினைத் தோய்த்து) உருவம் வரைந்து செய்த சித்திரப் பாவையை
ஒத்தவாராகிய, ஏவல் சேடியர் எழுநூற்று ஐவர் - ஏவல் செய்யும் லதியர்
எழுநூற்றைவரும் எ - று.
ஆயிரம்
காணம் விலைபெற்ற வென்க; ஆயிரம், மிகுதிக்கு ஓர்
எடுத்துக் காட்டு. தூசு - பருத்தியாடை; துகிலெனவும் வழங்கும்.
"பட்டுநீக்கித்
துகிலுடுத்து" |
என்பது
பட்டினப்பாலை. அமுதால உருவெழுதுதல்
"ஆதரித் தமுதிற்
கோல்தோய்த் தவயவ மமைக்குந் தன்மை" |
என இராமாயணத்தில்
வந்துளது. (51)
விளைவொடு மூன்று மூதூர் மின்னுவிட் டெறியுஞ் செம்பொன்
அளவிரு கோடி யின்ன வரும்பெறன் மகட்குச் செல்வ
வளமுற வரிசை யாக வழங்கினான் முழங்கி வண்டு
திளைமதுக் கண்ணிச் சோம சேகர மன்னன் மாதோ. |
(இ
- ள்.) விளைவொடு மூன்று மூதூர் - விளைந்த கழனிகளுடன்
கூடிய மூன்று பெரிய ஊர்களும், மின்னு விட்டு எறியும் செம்பொன் அளவு
இரு கோடி - ஒளிவிட்டு வீசும் செம் பொன் இரண்டு கோடி அளவும், இன்ன
- இவை போல்வன பிறவும், அரும் பெறல் மகட்கு - பெறுதற்கரிய தன்
புதல்விக்கு, வண்டு முழங்கித் திளை மதுகண்ணிச் சோமசேகர மன்னன் -
வண்டு ஒலித்துத் திளைக்கின்ற தேனினை யுடைய மாலையை யணிந்த
சோமசேகர மன்னன், செல்வவளம் உற வரிகையாக வழங்கினான் - செல்வ
வளத்திற்கேற்ப வரிசையாகக் கொடுத்தான் எ - று
|